அனுராதபுரம் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் ஆறு மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் அருகிலுள்ள மற்றுமொரு பாடசாலை மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் 17 வயதான மாணவர் ஒருவரை மேலதிக வகுப்புக்கு சென்று வரும் வழியில் வைத்து தாக்கியுள்ளனர்.

தாக்கப்பட்ட மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவர்கள் 6 பேரும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.