ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கலந்து கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சின் செயல்பாட்டாளர்கள் சந்திப்பு கூட்டம் சனிக்கிழமை (27), காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடமண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சிவலிங்கம் சுதர்சனன் தெரிவித்துள்ளார்.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பாளர்கள், உறுப்பினர்கள். முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பதவி நிலை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
இதுபோன்று அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் கட்சியின் செயலாளர் கேற்கும் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் தேர்தல்களை மையப்படுத்தி அதற்குரிய முன்னாயத்தமான கட்சியின் அமைப்பாளர்கள், உறுப்பினர்களையும், சந்தித்து ஊக்கப்படுத்தும் செயற்பாடுகள் செயலாளரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM