கிளிநொச்சியில் பஸ் - வேன் விபத்து ; ஒருவர் பலி ; 9 பேர் காயம்

Published By: Digital Desk 3

24 Jan, 2024 | 10:12 AM
image

கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று  வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதியதுடன்  எதிரே வந்த கயஸ் வேனிலும் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது கயஸ் வாகனத்தில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளதுடன், இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களில்  இரண்டு பேர் ஆபத்தான நிலையில்  மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் கிளிநொச்சி  மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  விபத்தில் 9 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன்,  நான்கு மாடுகள் காயமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16
news-image

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும்...

2024-06-15 21:27:49
news-image

சாதகமான பதிலின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்...

2024-06-15 21:22:14
news-image

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ...

2024-06-15 21:25:54
news-image

பாணமை கடலில் தவறி விழுந்து வைத்தியர்...

2024-06-15 21:48:25
news-image

பெண் ஊழியரின் துரித நடவடிக்கையால் பாரிய...

2024-06-15 21:49:57
news-image

யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைப்பதற்கு...

2024-06-15 21:24:21
news-image

4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்...

2024-06-15 21:27:01