லெதார்ஜி எனும் அதீத மந்த நிலை பாதிப்பிற்குரிய சிகிச்சை

23 Jan, 2024 | 04:58 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய இளம் தலைமுறையினர் அதிக உடலுழைப்பு இல்லாமல் புத்திசாலித்தனமாக உழைத்து பொருளீட்டுகிறார்கள். இவர்களில் பலரும் விரைவில் மனச்சோர்வு அடைகிறார்கள். சிலர் மட்டுமே தங்களைத் தாக்கிய மனசோர்விருந்து விடுவித்து கொள்கிறார்கள். மீதமுள்ளவர்கள் மனசோர்விலிருந்து விடுபட இயலாமல் சோம்பலுக்கு ஆளாகிறார்கள். இந்த சோம்பல்.. அவர்களை லெதார்ஜி என்னும் அதீத மந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறது. இதற்கு தற்போது உரிய மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று முழுமையாக மீள இயலும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், ஹைபோதைராடிசம், ஹைப்பர் தைராய்டிசம், பக்கவாதம், விருந்துகளின் போது அதிகமாக மது அருந்துதல், மூளை காய்ச்சல், மூளை காயம், சிறுநீரகக் கோளாறு, லைம் நோய், ஊட்டச்சத்து குறைபாடு, நீர் சத்தின்மை, தூக்கமின்மை, மனச்சோர்வு, கவலை, மன அழுத்தம், மன அழுத்த பாதிப்பிலிருந்து மீள்வதற்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் பக்க விளைவு போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய அதீத மந்த நிலை பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.

காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் போது அல்லது உடலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும்போது அதன் காரணமாக ஒருவர் சோர்வாகவும், மந்தமாகவும் உணர்வது பொது என்றாலும், இத்தகைய பாதிப்பிற்கு ஆளானவர்கள் அதைவிட அதீத மந்த நிலையை உணர்வார்கள். இவர்கள் பல தருணங்களில் சிறிய அளவில் தன் நிலையை மறந்திருப்பர். மிகவும் மெதுவாக நகர்வர். ஆற்றல் இல்லாமல் தவிப்பர். சிந்திக்கும் திறனும் குறைந்திருக்கும். இவர்கள் மற்றவர்களுடன் முழுமையான விழிப்புணர்வுடன் தொடர்பினை மேற்கொள்ள மாட்டார்கள். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் அவர்கள் லெதார்ஜி எனும் அதீத மந்த நிலை பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவர்களுக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனையை செய்தும்,  இதயம் மற்றும் நுரையீரல் குறித்த பிரத்யேக பரிசோதனையும் செய்து கொள்ள பரிந்துரைப்பர். மன நல விழிப்புணர்வு குறித்த பரிசோதனையும் மேற்கொண்டு இதற்கான காரணிகளை துல்லியமாக அவதானிப்பர்.

பெரும்பாலானவர்களுக்கு இத்தகைய அதீத மந்த நிலை பாதிப்பு மனநோயுடன் தொடர்பிருப்பதால் மன அழுத்த எதிர்ப்புக்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் அளிப்பர். அதே தருணத்தில் அவர்களின் வாழ்க்கை நடைமுறையில் மாற்றத்தையும் மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பர். திரவ ஆகாரத்தை சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இரவு நேரத்தில் சீரான உறக்கம் குறிப்பாக ஆழ்ந்த உறக்கம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவர். இதைத் தொடர்ந்து சரி விகித சத்துணவு, மன அழுத்தம் தொடர்பான சமநிலை பெறுவதற்கான பிரத்யேக சிகிச்சைகளையும் வழங்கி இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணத்தை அளிப்பர்.

வைத்தியர் கோபிநாத் - தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அசாதாரண கருப்பை ரத்தப்போக்கு பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 13:23:09
news-image

இடைநிலை நுரையீரல் தொற்று பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 09:12:17
news-image

மூளை கட்டியின் வகைகளும், காரணங்களும்...!?

2024-06-10 17:28:32
news-image

நீரிழிவு நோயால் நரம்பு மண்டல பாதிப்பு...

2024-06-08 16:19:56
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை ரத்த...

2024-06-07 18:48:18
news-image

குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதய குறைபாடு ஏற்படுவதை...

2024-06-04 14:04:02
news-image

உறக்கமின்மை குறைபாட்டை களைவதற்கான எளிய வழிமுறைகள்.?

2024-06-03 15:51:07
news-image

இரத்த சர்க்கரையின் அளவை உயர்த்தும் காரணிகள்...?!

2024-06-01 20:22:03
news-image

அடி வயிற்று தசை பிடிப்பு பாதிப்பிற்கான...

2024-05-31 16:33:40
news-image

முக வீக்க பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-05-30 17:29:57
news-image

பெட்ஸோர்ஸ் எனும் தோலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-05-29 17:38:38
news-image

இரத்த நாள பாதிப்பிற்குரிய காரணங்கள் என்ன?

2024-05-28 15:34:49