உங்களுக்கு பாஸ்கர யோகம் இருக்கிறதா..?

23 Jan, 2024 | 04:59 PM
image

எம்மில் பலரும் சோதிட நிபுணர்களை சந்தித்து தங்களது ஜாதகத்தை அவதானிப்பதற்காக கொடுக்கும் போது எமக்கு என்னென்ன யோகங்கள் இருக்கிறது? அவை எப்போது செயல்படும்? இதுவரை எந்த யோகமும் இல்லையே..? இனிமேலாவது யோகம் கிடைக்குமா? எனக் கேட்பதுண்டு. அதற்கு சோதிட நிபுணர்கள் உங்களது ஜாதகத்தில் சூரியன் எங்கு இருக்கிறார்? என்பதை அதாவது பன்னிரண்டு ராசி கட்டத்தில் எந்த ராசி கட்டத்தில் இருக்கிறார்? என்பதை அறிந்து அதற்கு ஏற்ப பலனை உரைப்பர்.

வாழ்க்கையில் எப்போதும் வெற்றி... தொட்டதெல்லாம் வெற்றி  தடையற்ற  வருவாய்.. மன மகிழ்ச்சியான குடும்பமும், குடும்ப உறுப்பினர்களும்... என சில பேருக்கு மட்டுமே அமைகிறது. அவர்களின் ஜாதகத்தை பார்த்தால் அவர்களுக்கு பாஸ்கர யோகம் இருக்கிறது என்பதை எளிதாக அவதானிக்கலாம்.

அதென்ன பாஸ்கர யோகம்..? உங்களுடைய ஜாதகத்தில் சூரியன் எந்த ராசியின் வீட்டில் அமர்ந்திருக்கிறாரோ.. அதற்கு அடுத்த வீட்டில் புதனும், சூரியன் அமர்ந்திருக்கும் முந்தைய வீட்டில் சந்திரனும் இருந்தால்.. இந்த அமைப்பு பாஸ்கர யோகத்தை வழங்குகிறது. மேலும் இந்த அமைப்புடன் குரு.. சந்திரன் நின்ற வீட்டிலிருந்து ஒன்று, நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திர வீட்டிலோ அல்லது ஐந்து, ஒன்பது எனப்படும் திரிகோண வீட்டிலோ இருக்க வேண்டும். இவைதான் முதல் தரமான பாஸ்கர யோகத்தை வழங்குகிறது.

உதாரணத்திற்கு ஒருவருக்கு ரிஷப ராசியில் சூரியன் இருக்கிறார் என்றால்.. அதற்கு அடுத்த வீடான மிதுனத்தில் புதனும், ரிஷபத்தின் முந்தைய வீடான மேஷத்தில் சந்திரனும் இடம் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் சந்திரன் நின்ற மேஷத்திலோ.. அதன் நான்காம் வீடான கடகத்திலோ.. ஏழாம் வீடான துலாம் வீட்டிலோ.. அதன் பத்தாம் வீடான மகரத்திலோ குருபகவான் இருக்க வேண்டும் அல்லது சந்திரன் நின்ற மேஷத்திலிருந்து ஐந்தாம் வீடான சிம்மத்திலோ அல்லது ஒன்பதாம் வீடான தனுசிலோ குரு இருக்க வேண்டும்.

இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு பாஸ்கர யோகம் சிறப்பாக செயல்பட்டு, சாதனையாளர்களாகவும், வெற்றிகர மிக்க மனிதர்களாகவும், ஆளுமை கொண்ட சக்தி வாய்ந்த நபர்களாகவும் திகழ்வார்கள். இவர்களுக்கு எதிரி என்பதே இருக்காது. அதையும் கடந்து இவர்களை யாராவது எதிர்த்தால்... அவர்களை எளிதாக தோற்கடித்து இவர்கள் மாபெரும் வெற்றியை பெறுவார்கள். வெற்றிப் பெற்றுக் கொண்டே இருப்பார்கள்.

இந்த பாஸ்கர யோகம் சூரியன்- சந்திரன்- புதன்- குரு - ஆகிய நான்கு கிரகங்களின் ஒன்றிணைவு காரணமாகவோ அல்லது ஆதிபத்தியம் காரணமாகவும் ஜாதகர்களுக்கு இந்த யோகத்தை அள்ளி அள்ளி வழங்குகிறது.

இவர்கள் இயல்பாகவே புத்திசாலித்தனம் மிக்கவர்களாகவும், சூழலுக்கு ஏற்றபடி சமயோசிதமாக பேசும் வல்லமை படைத்தவர்களாகவும், கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடத்தில் சூரிய வழிபாடு இயல்பாகவே இருக்கும். மேலும் இவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையாக இருந்தாலும் நினைத்த காரியங்களை சாதிக்க கூடிய வல்லமை படைத்தவர்களாகவும் இருப்பர்.

இது போன்ற பாஸ்கர யோகம் இல்லாதவர்கள்... உங்களுக்கு தெரிந்த பாஸ்கர யோகம் உள்ள நபர்களிடம் நட்பு வைத்தோ அல்லது பழக்கம் வைத்துக் கொண்டாலும் பலன் உண்டு.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வ நிலையை மேம்படுத்தும் கொட்டையூர் கோடீஸ்வரர்...

2024-04-15 17:19:54
news-image

அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி தரும் செந்தலை...

2024-04-11 10:43:09
news-image

சிறுநீரக கோளாறுகளை நீக்கி அருள் புரியும்...

2024-04-09 17:37:27
news-image

வாஸ்து தோஷமும், பித்ரு தோஷமும் நீக்கி...

2024-04-08 18:31:07
news-image

பெண்மணிகள் தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்...

2024-04-05 20:56:43
news-image

குழந்தை வரம் அருளும் வழுவூர் வீரட்டானேஸ்வரர்...

2024-04-04 15:21:26
news-image

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் -...

2024-04-04 15:24:18
news-image

புண்ணியத்தை அள்ளித் தரும் ஸ்ரீ வாஞ்சியம்...

2024-04-03 12:56:05
news-image

சித்தர்கள் அருளிய கோமுகி தீர்த்த பரிகாரம்

2024-04-02 14:21:11
news-image

துயர் களையும் தீப பரிகார வழிபாடு

2024-04-01 17:32:20
news-image

முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் தோஷங்களை விலக்கி,...

2024-03-24 21:02:46
news-image

சனி தோஷத்தை நீக்கும் ஆலய பரிகாரம்..!

2024-03-20 09:18:25