அரசாங்கத்தின் இருப்பை பாதுகாத்துக்கொள்ளவே நிகழ்நிலை காப்புச்சட்டமூலம் - ரவூப் ஹக்கீம் சபையில் எடுத்துரைப்பு

23 Jan, 2024 | 08:53 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சமூகவலைத்தலங்கள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை தடுத்து அரசாங்கத்தின் இறுப்பை பாதுகாத்துக்கொள்ளும் துரும்பாகவே நிகழ்நிலை காப்புச்சட்டமூலத்தை அரசாங்கம் பயன்படுத்த முயற்சிக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை (23)  இடம்பெற்ற உத்ததேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சமூகவலைத்தலங்களில் சிறுவர்கள் மற்றும்  பெண்கள் தொடர்பாக வெளியிடப்படும் மோசமான விடயங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கே நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை கொண்டுவருவதாக அரசாஙகம் தெரிவிக்கிறது. 

ஆனால் இதனை காரணம் காட்டிக்கொண்டு அரசாங்கத்தின் இறுப்பை பாதுகாத்துக்கொள்ள இந்த சட்டமூலத்தை அரசாங்கம் துரும்பாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகவே எமக்கு தெரிகிறது.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பாக வெளியிடப்படும் மோசமான விடயங்களை தடுப்பதற்கு இந்த சட்டமூலத்தை கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவித்தாலும் சட்டமூலத்தில் உள்ள 57 பிரிவுகளில்  2 பிரிவுகளில் மாத்திரமே பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஏனைய அனைத்து விடயங்களும் வலைத்தலங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் வலைத்தலங்கள் ஊடாக தகவல் பரிமாற்றிக்கொள்ளும் மத்தியில், அரசியல் நோக்கில் தங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வரும்போது அதனையும் கட்டுப்படுத்தும் முயற்சியாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நீண்ட கலந்துரையாடல் சென்றது.

அத்துடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் இன்று மக்களை நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறது. அதனால் அரசாங்கத்துக்கு எதிராக சமூக வலைத்தலங்களில் எழும் விமர்சனங்களை அடக்குவதற்கான நடவடிக்கையாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம். இது ஜனநாயக விரோத செயலாகும். 

அதேபோன்று அரசாங்கம் மக்கள் போராட்டத்துக்கு பயப்படுகிறது. அதனால் அவசரமாக இந்த சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருகிறது. இந்த சட்டமூலம் ஊடாக அரசாங்கம் பாதுகாக்கப்படுகிறது. அதனால்தான் நாங்கள் இதனை எதிர்க்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹோட்டலில் மின் தூக்கி அறுந்து விழுந்ததில்...

2025-06-15 17:24:15
news-image

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர்...

2025-06-15 16:44:08
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-06-15 16:53:45
news-image

31 இலட்சம் ரூபா மதிப்புள்ள வெளிநாட்டு...

2025-06-15 16:52:47
news-image

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-06-15 16:58:48
news-image

யாழில் வாள் வெட்டு ; நால்வர்...

2025-06-15 16:26:23
news-image

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மு.கா....

2025-06-15 16:14:01
news-image

டயகம பிரதேச வைத்தியசாலையில் அடிப்படை வசதிகளை...

2025-06-15 16:06:15
news-image

கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்...

2025-06-15 15:49:46
news-image

ராகமவில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர்...

2025-06-15 16:17:44
news-image

ஜூன் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40...

2025-06-15 14:29:11
news-image

தலைமைத்துவங்களும், மக்களும் கொண்டிருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க...

2025-06-15 14:15:50