ஐசிசி உலக அணிகளில் தலைவரானதன் மூலம் சமரி அத்தபத்துவுக்கு இரட்டைப் பெருமை

23 Jan, 2024 | 05:02 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலக அணித் தலைவியாக பெயரிடப்பட்டுள்ளதன் மூலம் சமரி அத்தபத்துவுக்கு இரட்டைப் பெருமை கிடைத்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அணிக்கு தலைவராக பெயரிடப்பட்டிருந்த சமரி அத்தபத்து ஒரு நாள் கழித்து ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் தலைவராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த அணியில் அவுஸ்திரேலிய வீராங்கனைகளே அதிகளவில் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் முழுவதும் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சமரி அத்தபத்து அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தினார்.

நியூஸிலாந்துக்கு எதிரான தீர்மானம் மிக்க கடைசிப் போட்டியில்  சமரி அத்தபத்து   80 பந்துகளில் 140 ஓட்டங்களைக் குவித்த தனது அணியை வெற்றிபெறச் செய்திருந்தார். இதன் மூலம் நியூஸிலாந்துக்கு எதிரான மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை முதல் தடவையாக வெற்றியீட்டி வரலாறு படைத்தது.

அந்தத் தொடரில் அவர் இரண்டு சதங்களை விளாசியிருந்தார்.

மழையினால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷக்கு எதிரான தொடரிலும் துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைகளிலும் பிரகாசித்த சமரி அத்தபத்து, அத் தொடரில் இலங்கை வெற்றிபெறுவதற்கு (1 - 0) உதவினார்.

கடந்த வருடம் 10 போட்டிகளில் 69.16 என்ற சராசரி, 125க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட் ஆகியவற்றுடன்  சமரி அத்தபத்து  415 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அவரது இந்த ஆற்றல்கள் ஆரம்ப வீராங்கனைகளில் ஒருவராக அவரை உலக அணியில் பெயரிட வைத்துள்ளது.

ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணி

ஃபோப் லிச்ஃபீல்ட் (அவுஸ்திரேலியா),  சமரி அத்தபத்து  (தலைவி - இலங்கை), எலிஸ் பெரி (அவுஸ்திரேலியா), அமேலியா கேர் (நியூஸிலாந்து), பெத் மூனி (விக்கெட் காப்பாளர் - அவுஸ்திரேலியா), நெட் சிவர் ப்றன்ட் (இங்கிலாந்து), ஏஷ;லி கார்ட்னர் (அவுஸ்திரேலியா), அனாபெல் சதர்லண்ட் (அவுஸ்திரேலியா), நாடின் டி க்ளார்க் (தென் ஆபிரிக்கா), லீ தஹுஹு (நியூஸிலாந்து), நஹிதா அக்தர் (பங்களாதேஷ்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை வருகை தரும் இந்திய ஏ...

2026-05-16 09:43:45
news-image

சென்னை பந்துவீச்சாளர்களை வாட்டி எடுத்தார் மிச்செல்...

2026-05-16 03:41:15
news-image

இலங்கை - நியூஸிலாந்து மகளிர் ஏ...

2026-05-16 03:37:30
news-image

டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 8 புள்ளிகளை இழந்தது...

2026-05-15 16:30:14
news-image

மும்பைக்கு ஆறுதல் வெற்றி ; பஞ்சாபுக்கு...

2026-05-15 10:26:29
news-image

மத்திய மற்றும் தெற்காசிய அணிக்கு எழுவர்...

2026-05-14 17:28:24
news-image

விராத் கோஹ்லி 9வது ஐபிஎல் சதம்,...

2026-05-14 09:36:21
news-image

SLC கிரிக்கெட் போட்டிகள் யாவும் பிற்போடப்பட்டன

2026-05-13 18:14:09
news-image

விளையாட்டுத்துறையில் புகழ்பெற்ற நிர்வாகி பிரேமா பின்னவல...

2026-05-13 17:34:45
news-image

LPL தொடரின் உலகளாவிய விரிவாக்கத்திற்காக 20...

2026-05-13 14:38:22
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை படுதோல்வி அடையச் செய்து...

2026-05-13 12:59:02
news-image

பாகிஸ்தானை கடைசி ஆட்ட நேர பகுதியில்...

2026-05-12 21:39:00