மட்டக்குளி பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்று மாளிகாக்கந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.