நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தால் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் - ஐக்கிய மக்கள் சக்தி

23 Jan, 2024 | 03:35 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நிகழ்நிலை காப்புச் சட்டமூல விவகாரத்தில் அரசாங்கம் அவசரப்படுவது பிரச்சினைக்குரியது.சேதனைப் பசளை நடைமுறைப்படுத்தலிலும் இவ்வாறான நிலை காணப்பட்டது.

இறுதியில் பெறுபேறு பாரதூரமாக இருந்தது.இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சேதன பசளை திட்டத்தை கடந்த அரசாங்கம் அவசரமாக செயற்படுத்தியது,இறுதியில் முழு நாடும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது.

உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலமும் அந்த வகையில் தான் முறையான வழிமுறைகள் ஏதும் இல்லாமல் அவசர அவசரமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

உத்தேச   நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின்  57 சரத்துக்களில் 34 சரத்துகள் அரசியலமைப்புக்கு முரண் என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம்  அரசியலமைப்புக்கு முரணா ,முரணற்றதா என்பதை மாத்திரமே நீதிமன்றம் ஆராயும்,கொள்கை ரீதியில்  நோக்காது.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான  பிரசாரங்களை  தடுப்பதற்காகவே  இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளாதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.ஆனால் இந்த சட்டமூலத்தின் உண்மை நோக்கம் அதுவல்ல,தற்போதைய டிஜிட்டல் யுகத்துக்கு எதிரான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்ட வகையில் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.இந்த சட்டமூலம் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.சிறந்த விடயங்களுக்கு எதிர்க்கட்சியினர் நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் பெரும்பாலான சரத்துக்கள்  நாட்டு மக்களை அச்சமூட்டும் வகையில் காணப்படுகிறது.

பிறிதொரு பெயரில் முகப்பு புத்தக கணக்குகளை பாவிப்பது ஐந்து வருட கால சிறைத்தண்டனைக்குரிய குற்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தனது சொந்த அடையாளத்தை வெளிப்படுத்தால் முரண்பாடற்ற வகையில் கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு,இந்த உரிமை இந்த சட்டத்தில் மீறப்பட்டுள்ளது.

இலங்கையில் சேவையில் உள்ள சமூக ஊடக நிறுவனங்களின்  செயற்பாடுகளுக்கு இந்த சட்டமூலத்தின் ஊடாக பாரிய நெருக்கடிகள் ஏற்படும்.

இதனால் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும்.பெரும்பான்மை பலம் தம்மிடம் உள்ளதால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.ஆகவே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் எதிர்காலத்தில் திருத்தம் செய்யப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியரசர்களின் வயதெல்லையை நினைத்த பிரகாரம் நீடிக்க...

2026-07-13 18:21:44
news-image

நெல் கொள்வனவில் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத்...

2026-07-13 20:30:23
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:...

2026-07-13 20:13:12
news-image

முதலாம் தர மாணவர் சேர்க்கை சுற்றறிக்கை...

2026-07-13 14:49:09
news-image

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை...

2026-07-13 19:48:25
news-image

முறையற்ற நியமனங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி...

2026-07-13 14:54:29
news-image

புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை :...

2026-07-13 18:14:20
news-image

டெங்கு பரவல் அச்சம் : கொழும்பு...

2026-07-13 17:58:22
news-image

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத்...

2026-07-13 18:06:15
news-image

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும்...

2026-07-13 17:39:16
news-image

தித்வா பாதிப்பு : வீடுகளை இழந்தவர்களுக்கான...

2026-07-13 17:19:23
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை கூரையின் மேல் போராடிய...

2026-07-13 17:03:24