கிளிநொச்சி பகுதியில் வங்கியொன்றின் பெண் ஊழியரும் அவரது கணவரும் இணைந்து முதியவர் ஒருவரை ஏமாற்றி சுமார் ஆறு இலட்சம் ரூபா பணத்தினை பெற்று மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரியும் வங்கியின் பெண் உத்தியோகத்தரும் அவரது கணவனும் இணைந்து முதியவர் ஒருவரிடம் மூன்று இலட்சத்து ஐம்பாயிரம் மற்றும் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவென ஆறு இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்ததுடன் அதற்கு பதிலாக மறுக்கப்பட்ட காசோலையினையும் வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட முதியவர் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட முதியவரால் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் இருவருக்கும் எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன் இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM