பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் அர்ட்டிகேரியா எனும் தோல் பாதிப்பிற்குரிய சிகிச்சை

23 Jan, 2024 | 12:48 PM
image

இணையதள வசதி அதிகரித்துவிட்ட இந்த தருணத்தில் எம்முடைய இளம் தாய்மார்கள் தங்களுடைய பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் இணைத்து வழங்க வேண்டிய உணவுகள் குறித்த  விடயங்களில் மற்றவர்களை கலந்து ஆலோசிக்காமல் இவர்களாகவே ஒரு முடிவை எடுத்து பச்சிளம் குழந்தைகளுக்கு உணவை வழங்குகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு அர்ட்டிகேரியா ( Urticaria ) எனப்படும் தோல் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு முறையான மருத்துவ சிகிச்சையை உரிய தருணத்தில் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் இது நாட்பட்ட பாதிப்பாக மாறக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

பிள்ளைகள் பெற்ற பெண்மணிகள் தங்களது பிள்ளைகளுக்கு கட்டாயம் ஆறு மாதம் தாய்ப்பாலை மட்டுமே உணவாக அளிக்க வேண்டும். ஆனால் மருத்துவர்கள் பிள்ளைகள் பிறந்து ஒன்றரை ஆண்டு காலம் வரை தாய்ப்பாலை புகட்டலாம் என்றும், ஆறு மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் வேறு திட மற்றும் திரவ உணவுகளையும் வழங்கலாம் என்றும் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இவை ஒவ்வொரு தாய்மார்களைப் பொருத்தும் அவர்களது பிள்ளைகளை பொருத்தும்  மாறுபடக்கூடும்.

குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்கு பிறகு அவர்களுக்கு தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்து உணவினை வழங்க தாய்மார்கள் விரும்புவர். ஆனால் நீங்கள் வழங்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு.... குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி தோல் பாதிப்பை உண்டாக்க கூடும். குறிப்பாக பால்மா பொருட்கள், முட்டை, ( வெள்ளை கரு அல்லது மஞ்சள் கரு) சத்துமாவு போன்ற உணவுப் பொருட்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும்.

குழந்தைகளுக்கு உணவு சார்ந்த ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால்.. அவை மூச்சுத்திணறல், தொண்டை அடைப்பு, தோல் பகுதிகளில் சிவந்திருத்தல் அல்லது தடிப்பு ஏற்பட்டிருத்தல், மலம் வெளியேறும் பகுதி சிவந்திருத்தல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். ஏனெனில் உணவு தொடர்பான ஒவ்வாமை பச்சிளம் குழந்தைகளின் உடலில் ஏற்பட்டிருக்கும் போது, அவர்களுடைய உடலில் டிஸ்டோனியா எனும் ரசாயன மாற்றம் நடைபெறுகிறது. இதனை உடனடியாக கண்டறிந்து உரிய சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை பெற வேண்டும். தவறினால் நாட்பட்ட பாதிப்பை தோலில் ஏற்படுத்தக் கூடும்.

மருத்துவர்கள் நீங்கள் குழந்தைக்கு வழங்கிய உணவின் விவரத்தையும், உணவு பட்டியலையும் விரிவாக கேட்டறிவர். அத்துடன் குழந்தைக்கு ரத்த பரிசோதனையும் மேற்கொள்வர். எந்த உணவு? அல்லது எந்த உணவுப் பொருள்? குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதனை கண்டறிந்து, அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என பரிந்துரைப்பர். மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்க தொடங்கும் போது மருத்துவர்களின் குறிப்பாக ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையையும், பரிந்துரையையும் அவசியம் பெற வேண்டும். சில பிள்ளைகளுக்கு ஒவ்வாமை காரணமாக தோலின் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்... பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் அதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.

வைத்தியர் சதீஷ்குமார் - தொகுப்பு அனுஷா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அசாதாரண கருப்பை ரத்தப்போக்கு பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 13:23:09
news-image

இடைநிலை நுரையீரல் தொற்று பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 09:12:17
news-image

மூளை கட்டியின் வகைகளும், காரணங்களும்...!?

2024-06-10 17:28:32
news-image

நீரிழிவு நோயால் நரம்பு மண்டல பாதிப்பு...

2024-06-08 16:19:56
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை ரத்த...

2024-06-07 18:48:18
news-image

குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதய குறைபாடு ஏற்படுவதை...

2024-06-04 14:04:02
news-image

உறக்கமின்மை குறைபாட்டை களைவதற்கான எளிய வழிமுறைகள்.?

2024-06-03 15:51:07
news-image

இரத்த சர்க்கரையின் அளவை உயர்த்தும் காரணிகள்...?!

2024-06-01 20:22:03
news-image

அடி வயிற்று தசை பிடிப்பு பாதிப்பிற்கான...

2024-05-31 16:33:40
news-image

முக வீக்க பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-05-30 17:29:57
news-image

பெட்ஸோர்ஸ் எனும் தோலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-05-29 17:38:38
news-image

இரத்த நாள பாதிப்பிற்குரிய காரணங்கள் என்ன?

2024-05-28 15:34:49