காரிய தடைகளை உடைத்தெறியும் சக்தி மிக்க பரிகாரங்கள்..!

23 Jan, 2024 | 12:41 PM
image

எம்மில் பலரும் சிறிய அளவிலான விற்பனை நிலையங்களை தொடங்கி வணிகத்தை மேற்கொண்டிருப்போம். இதில் நாளாந்தம் அல்லது மாதந்தோறும் குறிப்பிடத்தக்க அளவில் வாடிக்கையாளர்களின் வருகையும் அதனூடாக தன வரவும் இருக்கும். 

ஆனால் திடீரென்று நுகர்வோரின் எண்ணிக்கையும் குறைந்து, பண வரவும் குறைந்து, லாபம் குறைந்து, நஷ்டம் ஏற்பட தொடங்கும். இதற்கான காரணம் என்னவென்று தெரியாது.! சிலர் இதன் போது ஜோதிட நிபுணர்களை அணுகி  காரணங்களையும், அதற்கான பரிகாரங்களையும் கேட்பர்.

இத்தகைய காரிய தடைகளுக்கு கண் திருஷ்டி உள்ளிட்ட ஏராளமான கண்ணுக்குப் புலப்படாத மாயத்தடைகள் தான் காரணம். இதுபோன்ற தருணங்களில் ஜோதிட நிபுணர்கள் கேதுவின் ஆதிக்கத்தால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால்.. இந்து மத கடவுளான விநாயகரை உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள் என்றும், ராகுவின் ஆதிக்கத்தால் தான் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால்.. ராகு என்றால் இஸ்லாம் என்றும் பொருள் உள்ளதால்... இஸ்லாமியர்கள் பின்பற்றும் சில தடை நீக்க பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்திருக்கிறார்கள்.

பொதுவாக கண் திருஷ்டி, செய்வினை, மந்திரம், தாந்த்ரீகம், வசியக்கட்டு.. என ஏதேனும் சில காரணங்களால் உங்களுடைய சொந்த வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்தால்.. இதனை களைவதற்கு நீங்கள் முழு முதல் கடவுளான விநாயகர் பெருமாளை முதலில் சரணடைய வேண்டும். ஏனெனில் உங்களுடன் இருந்து கொண்டே உங்களின் வளர்ச்சியை தடை செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் உங்கள் மீது தவறான மந்திரங்களையும், மாந்திரீகங்களையும் பிரயோகித்து.. உங்களின் ஆரா தொடர்பான எல்லைக்குள் அதன் சக்தி ஊடுருவி, நேர் நிலையான எண்ண அலைகளை அழித்து, எதிர் நிலையான எண்ண அலைகளை ஏற்படுத்தி உங்களை அலைகழிக்கும்.

இது போன்ற தருணங்களில் உங்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் அரசமர விநாயகரை தரிசித்து, அவருக்கு ஒரு அரச இலையை பறித்து அதன் மீது நல்லெண்ணெய் விளக்கை ஏற்றி 11 முறை அந்த அரச மர விநாயகரைச் சுற்றி வந்தால், உங்களை ஆக்கிரமித்திருக்கும் கண்ணுக்கு புலப்படாத திருஷ்டி தோஷம் விலகும். இதன்போது விநாயகர் கட்டு மந்திரம், விநாயகர் அகவல் போன்றவற்றையும் பாராயணம் செய்யலாம். மேலும் இதனை சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் ஐந்து மணி முதல் ஆறு மணி வரை மேற்கொண்டால், திருஷ்டி விலகி உங்களுக்கான நன்மை கிடைக்கத் தொடங்கும்.

வேறு சிலருக்கு இத்தகைய திருஷ்டி தோஷம் விலக...சங்கடகர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்க வேண்டும். மறுநாள் அந்த ஆலயத்திற்கு சென்று விநாயகருக்கு கருவறையில் சேவகம் செய்யும் இறை பக்தி மிக்க குருக்களிடம் விநாயகருக்கு சாற்றப்பட்ட அருகம்புல்லை கேட்டு எடுத்து வந்து அதனை எம்முடைய வீட்டிற்குள் வைத்தாலும் தோஷம் விலகி, எம்முடைய ஆரா மீண்டும் சக்தி பெற்று இயங்கத் தொடங்கி லாபம் வரத் தொடங்கும்.

உங்களது விற்பனை நிலையம் அல்லது அலுவலகத்தில் வராஹி அம்மனின் சிறிய அளவிலான சிலை அல்லது அவரது புகைப்படத்தை வைத்து அதற்கு கரும்புச்சாறு அல்லது மாம்பழ சாறினை நைவேத்தியமாக படைத்து வணங்கி வந்தாலும்... திருஷ்டி தோஷம் விலகி, லாபம் வருவதை கண்கூடாக காணலாம்.

திருஷ்டி தோஷம் வலிமையாக இருந்தால்.. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அல்லது ஆன்மீக பொருட்கள் விற்பனையகத்தில் கிடைக்கும் 'பஞ்சகவ்யம்' எனும் பொருளை வாங்கி வந்து, அதனை நீரில் கலந்து 48 நாட்கள் நீராடி வரவேண்டும். இதனால் எம்முடைய திருஷ்டி தோஷம் விலகி ஆரா நிலை சக்தி பெற்று எம்முடைய எண்ண அலைகள் சீரான அதிர்வை உண்டாக்கி லாபத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.

இதுபோன்ற தருணங்களில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அல்லது ஆன்மீகப் பொருட்கள் விற்பனையகத்தில் கிடைக்கும் திருமஞ்சன பொடி+ இந்துப்பு +சந்தனம்+ பன்னீர்.. ஆகியவற்றை கலந்து உங்களுடைய விற்பனை நிலையம் அல்லது அலுவலகத்தில் தெளித்தால்... வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்து லாபம் குவியும்.

மேலும் திருஷ்டிகளால் உங்களுடைய தொழிலில் நஷ்டம் ஏற்படுவது தொடர்ந்தால்.. புதன் மற்றும் ராகு பகவானின் அம்சமாக திகழும் திருநங்கைகளிடம் அவர்களின் விருப்பத்திற்குரிய உணவுப் பொருட்களையோ அல்லது பணத்தையோ வழங்கி அவர்கள் மூலமாக திருஷ்டியை கழித்தால் உங்களின் கண் திருஷ்டி தோஷம் விலகும்.

சிலருக்கு சனிக்கிழமைகளில் அன்னதானம் செய்வதாலோ அல்லது நவதானிய தோசையை சாப்பிட்டு, அதனை தானமாக வழங்கினாலோ.. கண் திருஷ்டி தோஷத்துடன் நவகிரக தோஷமும் விலகி லாபம் உண்டாகும்.

மேலும் இதுபோன்ற தருணங்களில் மேற்சொன்ன எந்த பரிகாரங்களும் உங்களுக்கு பலன் அளிக்கவில்லை என  கருதினால்... நீங்கள் உங்கள் ஜாதகத்தில் எந்த திதியில் பிறந்திருக்கிறீர்கள்? என்பதனை துல்லியமாக அவதானியங்கள். ஒவ்வொரு திதிக்குரிய பிரத்யேக விநாயக பகவானிடம் உங்களின் பிரார்த்தனையை மனமுருக அருகம் புல்லுடன் வைத்தால்.. கடுமையான திருஷ்டி தோஷம் விலகி நீங்கள் எதிர்பாக்காத வகையில் லாபம் வரத் தொடங்கும்

அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளில் நீங்கள் பிறந்திருந்தால் 'நித்ய கணபதி' என்னும் கணபதியை தேடி கண்டறிந்து அவரை மனமுருகப் பிரார்த்தித்தால் தோஷம் விலகி லாபம் வரத் தொடங்கும்.

பிரதமை திதி - பால கணபதி

துவிதியை திதி - தருண கணபதி

திரிதியை திதி - பக்தி கணபதி

சதுர்த்தி திதி - வீர கணபதி

பஞ்சமி திதி - சக்தி கணபதி

சஷ்டி திதி - த்விஜ கணபதி

சப்தமி திதி - சித்தி கணபதி

அஷ்டமி திதி - உச்சிஷ்ட கணபதி

நவமி திதி - விக்ன கணபதி

தசமி திதி -  சுப்ர கணபதி

ஏகாதசி திதி - ஹேரம்ப கணபதி

துவாதசி திதி - லட்சுமி கணபதி

திரயோதசி திதி - மகா கணபதி

சதுர்த்தசி திதி - விஜய கணபதி

மேற்கூறிய கணபதியின் புகைப்படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அதனை பதிவிறக்கம் செய்தும் நீங்கள் பிரார்த்திக்கலாம். நீங்கள் எந்த திதியில் பிறந்திருக்கிறார்களோ அந்த திதிக்குரிய கணபதியை தெரிவு செய்து அதற்குரிய மூல மந்திரத்தை இணையதளத்தில் மூலம் அறிந்துகொண்டு அதனை நாளாந்தம் 108 முறை உச்சரித்து வந்தாலும் உங்களுக்கான திருஷ்டி மற்றும் தோஷ தடைகள் அகன்று வெற்றி கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.

தகவல் : நந்தகுமார்

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வ நிலையை மேம்படுத்தும் கொட்டையூர் கோடீஸ்வரர்...

2024-04-15 17:19:54
news-image

அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி தரும் செந்தலை...

2024-04-11 10:43:09
news-image

சிறுநீரக கோளாறுகளை நீக்கி அருள் புரியும்...

2024-04-09 17:37:27
news-image

வாஸ்து தோஷமும், பித்ரு தோஷமும் நீக்கி...

2024-04-08 18:31:07
news-image

பெண்மணிகள் தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்...

2024-04-05 20:56:43
news-image

குழந்தை வரம் அருளும் வழுவூர் வீரட்டானேஸ்வரர்...

2024-04-04 15:21:26
news-image

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் -...

2024-04-04 15:24:18
news-image

புண்ணியத்தை அள்ளித் தரும் ஸ்ரீ வாஞ்சியம்...

2024-04-03 12:56:05
news-image

சித்தர்கள் அருளிய கோமுகி தீர்த்த பரிகாரம்

2024-04-02 14:21:11
news-image

துயர் களையும் தீப பரிகார வழிபாடு

2024-04-01 17:32:20
news-image

முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் தோஷங்களை விலக்கி,...

2024-03-24 21:02:46
news-image

சனி தோஷத்தை நீக்கும் ஆலய பரிகாரம்..!

2024-03-20 09:18:25