சூரியக்கல மின்சக்தி மூலம் இலங்கையில் உள்ள ஆலயங்களை இணைக்கும் திட்டம் துரிதப்படுத்தப்படும் - இந்திய உயர்ஸ்தானிகர்

23 Jan, 2024 | 12:33 PM
image

இந்திய அரசின் உதவியின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களை சூரியக்கல மின்சக்தி மூலம் இணைக்கும் திட்டத்தினை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கடந்த 18 ஆம் திகதி கண்டிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போதே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களான முறையே சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மஹாநாயக்க தேரர் மற்றும் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் ஆகியோரிடமிருந்து உயர் ஸ்தானிகர் நல்லாசிகளை பெற்றிருந்தார்.

இந்தியா - இலங்கை மக்களுக்கு இடையிலான புராதன பிணைப்பின் மையப் பகுதியில் பௌத்தம் இருப்பதாக இச்சந்திப்புக்களின்போது சுட்டிக்காட்டியிருந்த உயர் ஸ்தானிகர், இருதரப்பு பௌத்த உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும் மகாநாயக்க தேரர்களுக்கு விவரித்திருந்தார்.

அதேபோல இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் நாடளாவிய ரீதியில் இருக்கும் ஆலயங்களை சூரியக்கல மின்சக்தி மூலம் இணைக்கும் திட்டத்தினை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் இச்சந்தர்ப்பத்தில் விசேடமாக குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து இருநாட்டு மக்களுக்கும் சுபீட்சம் மற்றும் நல்வாழ்வுக்காக ஆசிவேண்டியும் அம்மக்களிடையேயான தொடர்பினை வலுவாக்க வேண்டியும் உயர் ஸ்தானிகர் தலதா மாளிகையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்.

அத்துடன் அளவு மற்றும் நோக்கம் ஆகியவற்றினை மேலும் விஸ்தரிப்பதன் ஊடாக இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெற வேண்டுமென கண்டி கதிர்காமம் ஆலயத்தில் அவர் வழிபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதனை அடுத்து ஹந்தானை தோட்டப் பிரிவில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்திய வீடமைப்பு திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டிருந்தார். இத்தோட்ட பிரிவில் மூன்றாவது கட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் 50 வீடுகள் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நிலையில் வீடமைப்பு திட்டத்தின் அடுத்த கட்டத்தின் கீழ் இன்னும் பல வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களின் கீழ் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இரண்டு கட்டங்களாக மொத்தம் 14 ஆயிரம் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்தியா உறுதி அளித்துள்ளது.

பெருந்தோட்ட மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு ஆயுர்வேத முகாம் ஒன்றும் உயர் ஸ்தானிகரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்துடன் அத்தோட்டத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் குடைகளும் அவரால் வழங்கப்பட்டிருந்தன.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் நல்வாழ்வினை மேம்படுத்துவதனை இலக்காகக் கொண்டிருக்கும் இந்திய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுக்கு அமைவாகவே இவ்வாறான செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2023 ஜூலையில் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது இந்திய அரசாங்கத்தால் பல்துறைகளையும் இலக்காகக்கொண்டு அறிவிக்கப்பட்ட மூன்று மில்லியன் இலங்கை ரூபா நன்கொடை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி...

2024-06-22 00:34:31
news-image

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண...

2024-06-22 00:19:19
news-image

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன்...

2024-06-22 00:12:34
news-image

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச...

2024-06-22 00:01:03
news-image

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து...

2024-06-21 23:56:18
news-image

வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

2024-06-21 23:51:14
news-image

வங்குராேத்திலிருந்து நாடடை மீட்க அரசாங்கம் அனைத்து...

2024-06-21 21:45:12
news-image

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் குறித்து மீனவர்கள்...

2024-06-21 21:44:00
news-image

நீண்ட நாட்களுக்கு பழுதடையாத செமன் பக்கற்...

2024-06-21 21:40:13
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-06-21 21:36:48
news-image

போதைப்பொருட்களுடன் 693 பேர் கைது !

2024-06-21 21:37:38
news-image

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாட்டு...

2024-06-21 21:38:56