பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பேராசிரியர் ஒருவர் அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக ஆபத்தான நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கட்கிழமை (22) உயிரிழந்துள்ளார்.
விவசாய பீடத்திற்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்தில் மனைவியுடன் வசித்து வந்த பேராசிரியர் திங்கட்கிழமை (22) அதிகாலை ஒரு மணியளவில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விவசாய பீடத்தில் பயிர் விஞ்ஞானப் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றிய பேராசிரியர் பி.எல்.பீரிஸ் (60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக ஊடகப் பேச்சாளரும், பிரதி உபவேந்தருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
பேராசிரியரின் மனைவி பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்தில் பணிபுரிவதோடு, மரணம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் குறித்து உறுதியான அறிக்கையை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM