நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை திருத்தங்களுடன் நிறைவேற்ற அங்கீகாரம் - ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு

Published By: Vishnu

22 Jan, 2024 | 07:40 PM
image

உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு அமைய உத்தேச  நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை நிறைவேற்ற ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அங்கீகரித்துள்ளது.

ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லலித் வர்ண குமார தலைமையில்  திங்கட்கிழமை (22) பாராளுமன்றத்தில் கூடியபோது இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கமைய குறித்த சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்காக செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்றத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக்  கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அத்துடன், குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான  கயந்த கருணாதிலக,ஜயந்த கெட்டகொட, சஞ்சீவ எதிரிமான்ன, ஜகத் சமரவிக்ரம ஆகியோருடன் குழுவின் தலைவருடைய அனுமதியுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான  எரான் விக்ரமரத்ன மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து திருத்தங்களை முன்மொழிவதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும்,இது தொடர்பில் கொள்கை ரீதியான விடயங்கள் திருத்தங்களுக்கு உள்ளாக வேண்டி இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களான  கயந்த கருணாதிலக, இரான் விக்ரமரத்ன மற்றும்  சந்திம வீரக்கொடி ஆகியோர் சுட்டிக்காட்டினர். நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை  பாராளுமன்றத்தில் நிறைவேற்றாது மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்படும் என்று குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி மக்களிடம் மீண்டும் செல்ல முடியாத...

2026-08-16 17:25:01
news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13
news-image

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அடையாளம்...

2026-08-16 16:14:05
news-image

சமூக ஊடகங்களில் அவதூறு : குற்றப்புலனாய்வு...

2026-08-16 16:25:53
news-image

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூடு: இலக்கு மாறியதால்...

2026-08-16 15:57:49
news-image

மீரிகமவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்களில்...

2026-08-16 15:45:29
news-image

கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர்...

2026-08-16 15:38:28