இலங்கை அரசாங்கம் யுக்திய நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் - ஐ.நாவின் நிபுணர்கள் வேண்டுகோள்

Published By: Rajeeban

22 Jan, 2024 | 05:54 PM
image

இலங்கை அரசாங்கம் யுக்திய நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும் அது குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகளின்  நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போதைப்பொருளிற்கு எதிரான கடுமையான பாதுகாப்பைநடவடிக்கைகளை அடிப்படையாக கொண்ட அணுகுமுறை குறித்து ஐக்கியநாடுகளின் நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அதிகாரிகள் உடனடியாக இந்த நடவடிக்கையை இடைநிறுத்தவேண்டும் மீளாய்வு செய்யவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட கொள்கைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும்எனவும் ஐநாநிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 புறக்கணிக்கப்பட்ட சமூக பொருளாதார குழுக்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான போதைப்பொருள் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டதை கடுமையாக கண்டித்துள்ள ஐநாவின் மனித உரிமை நிபுணர்கள் கட்டாய இராணுவ புனர்வாழ்வு முகாம்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதையும் கண்டித்துள்ளனர்.

யுக்திய எனப்படும் நடவடிக்கையின் போது சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

போதைப்பொருள் பாவனையாளர்களிற்கு  எதிரான கடும் ஒடுக்குமுறை காணப்படும் காணப்படும் சூழமைவில் இது கவலையளிக்கின்றது என ஐக்கியநாடுகள் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொக்கட்டிச்சோலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட...

2026-04-11 13:52:20
news-image

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர் திரும்பும்...

2026-04-11 13:55:09
news-image

“முழு நாடுமே ஒன்றாக”: நாடளாவிய ரீதியில்...

2026-04-11 13:22:13
news-image

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த...

2026-04-11 13:37:56
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: 2009 முதல்...

2026-04-11 13:27:39
news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59
news-image

22 பில்லியன் நிலக்கரி மோசடி :...

2026-04-11 11:45:29