புத்தளம் கல்லடி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) யானையொன்று மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த நிலையில் புத்தளம் வனஜீவராசிகள் பிரிவினர் மீட்டுள்ளனர் .
குறித்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த அதிவலு கொண்ட மின்சாரக் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த காட்டு யானை சுமார் 8 அடி உயரமுடைய 30 வயது மதிக்கத்தக்கதென வனஜீவராசிகள் பிரிவினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு புத்தளம் நீதிமன்றத்தில் இன்று (22) முன்னிலைப் படுத்தப்பட்டனர்.
இதன்போது ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்த நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றுமொருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதன்போது நிகவரெட்டிய மிருக வைத்திய சிகிச்சைப் பிரிவினர் இன்று நண்பகல் வருகத் தந்து உயிரிழந்த யானையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். குறித்த யானை மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக மிருக வைத்தியர் இசுரு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM