ஒடுக்கப்படும் சாமானிய மக்களுக்காக தமிழ் அரசு கட்சியின் புதிய தலைமைத்துவம் செயற்பட வேண்டும் - சிறிதரனுக்கான வாழ்த்தில் பிள்ளையான் கோரிக்கை

Published By: Vishnu

22 Jan, 2024 | 06:40 PM
image

மேட்டுக்குடிகளின் நலன்களுக்கு அப்பால் ஒடுக்கப்படும் சாமானிய மக்களின் நலன்பேணும் தலைமையாக தமிழரசுக்கட்சியின் வரலாற்றுப் பாத்திரமானது புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புவதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசு கட்சியின் தலைமைத் தேர்வு முடிவுகள் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள்அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நீண்ட நெடிய அரசியல் வரலாற்றினை கொண்ட எம் சமூகத்தின் பழம் பெரும் கட்சி ஒன்றுக்கு தலைமை ஏற்றிருக்கும் தங்கள் பயணம் வெற்றுக் கோச சித்தாந்த அரசியலுக்கப்பால் தமிழ் மக்களின் நிலம், நிருவாகம், உரிமை மற்றும் இருப்பு சார்ந்து வெற்றியடைய வேண்டும் என விரும்புகின்றேன்.

மேட்டுக்குடிகளின் நலன்களுக்கு அப்பால் ஒடுக்கப்படும் அடிமட்ட சாமானிய மக்களின் நலன்பேணும் தலைமையாக தங்கள் வரலாற்றுப்  பாத்திரமானது புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பாடசாலையொன்றில் சிவலிங்கத்தை அகற்றியதற்கு எதிராக...

2026-01-25 12:03:42
news-image

பெரகல வனப்பகுதியில் பெண் கொலை :...

2026-01-25 11:58:42
news-image

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள்...

2026-01-25 11:06:23
news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 12:04:52
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள்...

2026-01-25 10:27:25
news-image

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து எதிரணியினருடன்...

2026-01-25 10:22:35
news-image

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான...

2026-01-25 10:16:46
news-image

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட...

2026-01-25 10:15:59
news-image

திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 ஆவது...

2026-01-25 10:12:08
news-image

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை...

2026-01-25 10:03:18
news-image

ஊழல்களை மறைப்பதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம்...

2026-01-25 09:58:46
news-image

கல்வி சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சி...

2026-01-25 09:53:40