(எம்.மனோசித்ரா)
கல்விப் பொதுதராதர சாதாரண பரீட்சை - 2023க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சாத்திகள் தத்தமது பாடசாலை ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பிக்க முடியும். இவ்வாண்டிலிருந்து பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் சகல தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை அற்ற 15 வயதுக்குட்பட்ட தனிப்பட்ட பரீட்சாத்திகள் சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற எதிர்பார்த்தால் அவர்கள் விண்ணப்பிப்பதற்கு பரீட்சை திணைக்களத்துக்கு வருகை தர வேண்டியது கட்டாயமாகும்.
இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்துக்குள் பிரவேசித்து உரிய வழிகாட்டல்களை அறிந்து கொள்ள முடியும். பெப்ரவரி 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் விண்ணப்பத்துக்காக காலம் நிறைவடையும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM