அயோத்தி ராமர் கோவிலை இந்தியப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Published By: Digital Desk 3

22 Jan, 2024 | 03:53 PM
image

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா இன்று திங்கட்கிழமை (22) பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.

அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. 

பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அங்கு உரையாற்றிய அவர்,

சன்னியாசிகள், பக்தர்களை அயோத்திக்கு வரவேற்கிறேன். இந்த நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இன்று ராமர் வந்துவிட்டார். ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது.

கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க தருணம் மட்டுமல்ல புதிய காலச்சக்கரத்தின் துவக்கம். 1,000 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நாளை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.

இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார். ராமர் கோயில் திறப்பு மூலம் அடிமை மனநிலைக்கு முடிவுகட்டியுள்ளோம்.

நமது தியாகத்தில் சில குறைபாடுகள் இருந்தன. குறைகள் இருப்பின், ராமர் நம்மை மன்னிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

தெய்வீக அனுபவத்தை நான் உணர்கிறேன். நாட்டில் நியாயத்தை வழங்குவதற்கு நியாய ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

11 நாள் விரதத்தின் போது ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட கோயில்களில் வழிபட்டேன். பகவான் ராமர் நாட்டு மக்களின் மனங்களில் உள்ளார். ராமரின் ஆசிர்வாதத்தால் ராமர் பாலம் தொடங்கும் அரிச்சல்முனையில் நேற்று வழிபட்டேன்.

ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்தார்; ராமர் வருகைக்காக அயோத்தி பல காலம் காத்திருந்தது. இந்தியா இன்றுதான் தீபாவளியை கொண்டாடுகிறது. ராமர் கோயில் கட்ட வழிவகை செய்த இந்திய நீதித்துறைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்