இந்தியாவின் சிறந்த ஆன்மிகத் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து, ஆசீர்வாதம் பெற்றதோடு, இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதன்போது அவரது ஆர்ட் ஒஃப் லிவிங் அமைப்பின் மூலம் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக உதவி வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வாழ்க்கையின் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை போதிக்கும் புத்தகங்களை ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பரிசாக வழங்கினார்.
மேலும், தற்போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ள பணிகளுக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
ஆர்ட் ஒஃப் லிவிங் அமைப்பு என்பது ஒரு உலகளாவிய அமைப்பாகும். இது உலகளாவிய மக்கள் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குதல் போன்ற சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM