(எம்.சி.நஜிமுதீன்)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின வைபம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.

நாளை பி.ப. 2 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தில் “தாய்மார்களைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேரணியாக விகாரமகாதேவி பூங்கவிற்கு சென்று அங்குள்ள திறந்தவெளி அரங்கில் கூட்டம் நடத்தவுள்ளனர். அக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.