கடும் சுகயீனமடைந்த கணவரை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல ஆயத்தமான போது,  கணவருக்கு சுகயீனம்  என்பதை தாங்கிக்கொள்ளாத மனைவி, அதே இடத்தில் விழுந்து உயிர்விட்டதோடு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட கணவரும் உயிரிழந்த பரிதாபச் சம்பவம் வவுனியாவில் பதிவாகியுள்ளது.

வவுனியா மகாரம்பக்குளம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த  பொன்னையா இராஜகோபால் மற்றும் இராஜகோபால் நாகம்மா ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று இரவு கணவருக்கு சுகயீனம் காரணமாக வைத்திய சாலைக்கு கொண்டுச் செல்ல ஆயத்தமான போது கணவருக்கு சுகயீனம்  என்பதை தாங்கிக்கொள்ளாத மனைவி அதே இடத்தில் விழுந்து உயிரை விட்டுள்ளார்.

இதனையடுத்து கணவரை  உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்ற போதும் அவருடைய உயிரும் பிரிந்துள்ளது.

 இருவருக்கும் இடையிலான அளவுக் கடந்த அன்பின் வெளிப்பாடே இந்த மரணத்திற்கு காரணம் என குறித்த தம்பதிகளை புகழும் பிரதேச மக்கள், இந்நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.