இந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டம் இன்று பெங்ளூரில் நடைபெற்றது.

இன்றைய ஆட்டநேர முடிவின்போது இந்திய அணி 213 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்துள்ளது.

இந்திய அணி சார்பில் புஜாரா ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களையும், அஜின்கயா ரஹானி  ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் ஹெசல்ஹுட் 3 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இன்றைய ஆட்டம் ஆரம்பமாகும் போது துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 276 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

ஆஸி அணி சார்பில் ஷோன் மார்ஷ் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், ஜடேஜா 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 126 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது.