சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்ற மூவர் லொறியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பதுளை - ஹாலிஎல திக்வெல்லவத்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்றதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிமடை, குருத்தலாவ மற்றும் அட்டம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 34, 41 மற்றும் 44 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கைது செய்யும்போது இரண்டு எருமை மாடுகளும், ஒரு கர்ப்பிணிப் பசுவும் லொறியில் அடைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹாலிஎல, கடவல பகுதியிலிருந்து வெலிமடை, குருத்தலாவ பகுதிக்கு இந்த மாடுகள் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM