Colombo Motor Show 2023இன் உத்தியோகபூர்வ வங்கிப் பங்குதாரராக மீண்டும் செலான் வங்கி

21 Jan, 2024 | 09:04 PM
image

செலான் வங்கி, இலங்கையின் மிகப்பெரிய சர்வதேச மோட்டார் மற்றும் மோட்டார் பாகங்களின் கண்காட்சியான Colombo Motor Show 2023இன் உத்தியோகபூர்வ வங்கிப் பங்குதாரராக தொடர்ந்து 6ஆவது வருடமாக இணைந்தது. இந்நிகழ்வு சிறிமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நவம்பர் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெற்றதுடன் 60,000க்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது.

Colombo Motor Show உடனான செலான் வங்கியின் இணைவு, வாகனத் துறையில் நிதி வலுவூட்டல் மற்றும் அணுகல்தன்மைக்கு வழிவகுப்பதற்கான வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது. இந்நிகழ்வில் வங்கியின் பரந்த அளவிலான சேவைகள் பற்றியும் அதன் தீர்வுகள் தொடர்பாகவும் பங்கேற்பாளர்கள் நேரடியாகத் தெரிந்து கொண்டதுடன் குறிப்பாக சிறப்பு வட்டி வீதங்களைக் கொண்ட வங்கியின் லீசிங் வசதிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right