இலங்கை தமிழரசு கட்சியினுடைய வரலாற்றிலே ஒரு ஜனநாயக ரீதியான உரையாடல் ஊடாகவும் ஜனநாயக ரீதியான செயல்முறையின் ஊடாகவும் வரலாற்றில் முக்கிய வரலாற்றை பதித்துள்ளோம். என்னுடன் போட்டியிட்ட எம்.ஏ.சுமந்திரன் சீ.யோகேஸ்வரன் ஜயாவும் இணைந்து கட்சியுனுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் எமது மக்களின் உரிமைக்காக தேசிய இருப்புக்காக தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோம் என தமிழரசு கட்சியின் புதிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் சூழுரைத்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் 47 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்ற சிவஞானம் சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
என்னை தெரிவு செய்வதற்கு காரணமாக இருந்த இயற்கை என்னும் இறைவனுக்கும் எனக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அயராது உழைத்த அந்த பொதுசபை உறுப்பினர்களின் மிகப் பெறுமதியான வாக்குகளால் தவைவராக தெரிவு செய்ததற்கு முதலில் எனது நன்றிகள்.
இன்று இது பலபேருக்கு பல நம்பிக்கைகளை தந்திருக்கின்றது பல இளைஞர் யுவதிகள் கட்சி பற்றிய அதிகமான அக்கறை கொள்ளவைத்துள்ளது என்னுடன் போட்டியிட்ட நண்பர் எம்.சுமந்திரன் சீ.யோகேஸ்வரன் ஜயாவும் இணைந்து கட்சியுனுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் எமது மக்களின் உரிமைக்காக தேசிய இருப்புக்காக தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து எங்களுடைய பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோம் அந்த கடமையை சரியாக செய்வோம் அதற்காக பலதடவை பல ஊடகங்கள் ஊடாக எங்களுடைய ஒற்றுமையையும் பலத்தையும் தெளிவுபடுத்தியிருந்தோம்
நண்பர் சுமந்திரன் கூட பலதடவை தெளிவாக பல இடங்களில் சொல்லியிருந்தார் ஆகவே எங்களுடைய பங்கு என்பது இனம் சார்ந்தது தமிழ் தேசியத்தினுடைய இருப்பு சார்ந்தது எங்களுடைய இனத்துக்கான அடிப்படை உரிமைகள் சார்ந்தது அந்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் எல்லோரும் எங்களது கடமைகளை ஒன்றாக பலப்படுத்துவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM