ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது எமது இதயத்தில் இருக்கும் கட்சியாகும். மாறாக  டாலி வீதியில் அமைந்துள்ள பதாகையில் அல்லவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அகலவத்தையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது எமது இதயத்தில் இருக்கும் கட்சியாகும். கொள்கை ரீதியிலும் மக்களுக்கான நகர்வின் மூலமும் இதை நாம் கொண்டு செல்கின்றோம். மாறாக  டாலி வீதியில் அமைந்துள்ள பதாகையில் அல்ல. யாரும் பலாத்காரமாக கட்சியை தனதாக்க நினைத்தால் அதற்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.  

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பண்டாரநாயக்க, ராஜபக்ஷ  வம்சத்தினர் வெளியேறியமை ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த அல்ல, அவர்களின்  அரசியல் கொள்கையில் இருந்து மாறுபட்ட இந்த நாட்டிற்கு ஏற்ற அரசியல் கொள்கையை உருவாக்கவே. 

இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் நகர்வுகளில் வெளிப்படையாக தெரிகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.