அஹ்மத் பந்துவீச்சிலும் மெக்கின்னி துடுப்பாட்டத்திலும் அபாரம்; ஸ்கொட்லாந்தை கவிழ்த்தது இங்கிலாந்து

Published By: Vishnu

21 Jan, 2024 | 10:08 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்கொட்லாந்துக்கு எதிராக பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (20) நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண பி குழு போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

ஸ்கொட்லாந்தை 174 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இங்கிலாந்து 23.4 ஓவர்கள் மீதம் இருக்க 3 விக்டெக்களை மாத்திரம் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பர்ஹான் அஹ்மதின் துல்லியமான பந்துவீச்சு, அணித் தலைவர் பென் மெக்கின்னியின் அபார துடுப்பாட்டம் என்பன இங்கிலாந்தின் வெற்றியை சுலபமாக்கின.

ஜேட்ன் டென்லி, பென் மெக்கின்னி ஆகிய இருவரும் 94 பந்துகளில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பென் மெக்கின்னி 68 பந்துகளில் 12 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 88 ஓட்டங்களையும் ஜேட்ன் டென்லி 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட நோவா தெய்ன் 22 ஓட்டங்களையும் லூக் பென்கின்ஸ்டீன் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் ஹம்சா ஷெய்க் ஆட்டம் இழக்காமல் 6 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இப்ராஹிம் பைஸால் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 174 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜெமி டன்க் (40), அணித் தலைவர் ஓவென் கல்ட் (48) ஆகிய இருவரே திறமையை வெளிப்படுத்தினர். அடுத்த அதிகப்பட்ச எண்ணிக்கையாக 26 உதிரிகள் கிடைத்தது.

பந்துவீச்சில் பர்ஹான் அஹ்மத் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் லூக் பென்கென்ஸ்டீன் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: பென் மெக்கின்னி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-16 13:57:56
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56