வருவாயை அதிகரிப்பதற்கான எளிய வாழ்வியல் சூட்சும பரிகாரங்கள்

20 Jan, 2024 | 06:11 PM
image

இந்த பிறவியில் பொருள் ஈட்டுவதற்காகவே பெரும் பகுதியை செலவு செய்கிறோம். கடினமாக உழைத்தாலும் ஒரு எல்லைக்கு மேல் பண வரவு என்பது இருப்பதில்லை. இதனால் பலரும் கடினமாக உழைப்பதற்கு பதில் புத்திசாலித்தனமாக உழைக்கவே முன்னுரிமை தருகிறார்கள். இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை தத்துவமாகவே இந்த புத்திசாலித்தனம் என்பது முன்மொழியப்படுகிறது. 

இதில் சுயநலம் அதிகமாக இருந்தாலும் மக்கள் குறுகிய காலத்திற்குள் அதிகமாக செல்வங்களை சேர்க்கவே பெரு விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.‌ இந்நிலையில் ஆன்மீக வழிகாட்டிகள் பலரும் இந்த தலைமுறையினரின் மனநிலைக்கு ஏற்ப பணவரவு குறித்த ஏராளமான குறிப்புகளை வழங்கியபடியே உள்ளனர். 

தாந்த்ரீக பரிகாரங்கள், வாழ்வியல் பரிகாரங்கள், ஆலய வழிபாட்டு பரிகாரங்கள், சூட்சும பரிகாரங்கள்... என பல விடயங்களை அளித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் பண வரவை அதிகரிக்க வாழ்வியல் சூட்சம பரிகாரங்களையும் எம்முடைய ஆன்மீகப் பெரியோர்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள்.‌ 

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களும் பின்வரும் சூட்சம பரிகாரங்களை பின்பற்றினால் அவர்களுடைய பணவரவு என்பது தங்கு தடையில்லாமல் வந்து கொண்டிருக்கும். சில ராசிக்காரர்கள் குறிப்பிட்டப் பொருட்களை தங்களுடன் எப்போதும் வைத்திருப்பதால் பணவசியம் ஏற்பட்டு தன வரவு உண்டாகும். 

மேஷம் ராசிக்காரர்கள் அருகில் உள்ள காய்கறி கடைக்குச் சென்று விரைவில் அழுகி, ஏனைய தாவரங்களுக்கு உரமாகும் காய்கறிகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் காய்கள் அழுகி உரமானவுடன் அருகில் உள்ள வயல்களுக்கோ அல்லது தோட்டங்களுக்கோ உரமாக்கி விடுங்கள். இதனால் உங்களுடைய வருவாய் உயர்ந்து கொண்டே இருக்கும். குறிப்பாக நாளாந்தம் அழுகும் காய்கறிகளை இதன் போது பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

ரிஷப ராசிக்காரர்கள் அருகிலுள்ள ஆலயத்திற்கு நாளாந்தமோ அல்லது வார கணக்கிலோ அல்லது மாதக் கணக்கிலோ கற்பூரம், பத்தி, நவீன கொம்ப்யூட்டர் சாம்பிராணி உள்ளிட்டவற்றை தானமாக வழங்கி வந்தால்... பணவரவு என்பது தங்கு தடையில்லாமல் இருக்கும். மேலும் ஒரு கற்பூரத்தை அல்லது பச்சை கற்பூரத்தை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதனை வெள்ளைத் துணியில் கட்டி உங்களது மணி பர்ஸில் வைத்துக் கொண்டால்.. அதில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

மிதுன ராசிக்காரர்கள் உங்களுடைய இல்லத்தில் அமையப்பெற்றிருக்கும் பூஜை அறையில் வலம்புரி சங்கை ஒன்றை வைத்து அதில் பச்சரிசியை நிரப்பி அதன் மீது சோழி ஒன்றை வைத்து வணங்கி வந்தால்.., பணவரவு என்பது கிடைத்துக் கொண்டே இருக்கும். சிறிய அளவிலான சங்கு, சோழி, சிறிதளவு பச்சரிசி இவற்றை உங்களுடைய மணி பரிசில் வைத்துக் கொண்டிருந்தாலும் பணவரவு இருக்கும்.

கடக ராசிக்காரர்கள் ஒரஞ்சு பழ தோல், சூரியகாந்தி பூ ஆகியவற்றை தங்களுடன் வைத்துக்கொண்டால்.. அல்லது இதனை மணி பர்ஸில் வைத்துக் கொண்டால் பணவரவு இருந்து கொண்டே இருக்கும்.  வீட்டில் ஒரஞ்சு பழத்தை எப்போதும் வைத்துக் கொண்டிருங்கள். சீசன் இல்லாத தருணங்களில் ஒரஞ்சு பழப் புகைப்படத்தை உங்களுடைய மணி பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் தங்களுடன் எப்போதும் சிறிய நோட்டுப் புத்தகம் ( கையடக்க நோட்புக் ) ஒன்றையும், பேனா ஒன்றையும் வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு சாதகமாக சூழலை உருவாக்கி பணத்தை உண்டாக்கி தரும்.

கன்னி ராசிக்காரர்கள் வாசனை திரவியங்களை உங்களுடைய உடலில் ஸ்ப்ரே செய்து கொண்டு வெளியில் செல்லுங்கள் அல்லது உங்களது தொழில் சார்ந்த சந்திப்பின் போது... பண வரவை உறுதியாக்கும் சந்திப்பின்போது.. வாசனை திரவியத்தை பயன்படுத்த வேண்டும். உங்களுடைய மணி பர்ஸிலும் சிறிய அளவிலான வாசனை திரவிய போத்தலை வைத்துக் கொள்ளுங்கள்.

துலா ராசிக்காரர்கள் தங்களுடன் எப்போதும் கல் உப்பு சிறிதளவு, ஒரு கோமதி சக்கரம், ஒரு ஏலக்காய் ஆகிய மூன்று பொருட்களையும் உடன் வைத்திருங்கள். இதனை உங்களுடைய மணி பர்ஸில் வைத்துக் கொண்டிருக்கும் போது தன வரவு வந்து கொண்டே இருக்கும். தொழில் சார்ந்த பேச்சு வார்த்தையை தொடங்குவதற்கு முன் உங்களிடம் இருக்கும் கல் உப்பை சிறிதளவு எடுத்து வாயில் வைத்துக் கொண்டு பேசத் தொடங்கினால்... பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்து தன வரவு கிடைக்கும்.‌

விருச்சிக ராசிக்காரர்கள் ஆலயத்திற்கோ அல்லது ஏதேனும் சுப நிகழ்விற்கோ சென்று அங்கு நடைபெறும் ஹோமத்தில் பங்கு பற்றி, அங்கு அக்னிக்கு உணவாக அளிக்கப்படும் அப்பிள் போன்ற பழத்தையோ அல்லது நெய் போன்றவற்றை தானமாக அளித்தால்.. பண வரவு கிடைக்கும். ஹோமம் நிறைவடைந்த பிறகு காத்திருந்து.. அதில் இடப்பட்டிருக்கும் நாணயங்களை ஒன்றை சேகரித்து, உங்களுடைய மணி பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாகவும் உங்களுக்கு தன வசியம் உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் போது தங்களுடைய மணி பர்ஸில் சிறிதளவு நிலக்கரியை உடன் எடுத்துச் செல்லுங்கள். இவை உங்களுக்கு எப்போதும் தன வரவை வழங்கிக் கொண்டே இருக்கும்.

மகர ராசி காரர்கள் எப்போதும் தங்களுடைய மணி பர்ஸில் பழங்காலத்திய துளையிடப்பட்ட செப்பு நாணயங்களை வைத்துக் கொண்டிருங்கள். இவை உங்களுக்கான தன வசியத்தை வழங்கிக் கொண்டிருக்கும்.

கும்ப ராசிக்காரர்கள் தங்களுடைய மணி பர்ஸில் எப்போதும் மீனின் புகைப்படத்தையும், சோழி, கடல் சிப்பி ஆகியவற்றை வைத்துக் கொண்டிருந்தால்... பண வசியம் நடைபெற்று, தன வரவு இருந்து கொண்டே இருக்கும்.

மீன ராசிக்காரர்கள் எப்போதும் தங்களுடன் சிறிய அளவிலான மெழுகுபர்த்தியை வைத்துக் கொள்ளுங்கள். லாபம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன் அந்த மெழுகுபர்த்தியை ஏற்றி அதிலிருந்து இரண்டு அல்லது மூன்று சொட்டு மெழுகு உருகியவுடன்.. அணைத்து விட்டு, பேச்சு வார்த்தையை தொடங்கினால்.. உங்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்பட்டு, பணவரவு உண்டாகும்.

இத்தகைய சூட்சும வாழ்வியல் பரிகாரங்களை தொடர்ந்து செய்யும்போது.. அதாவது நீங்கள் வெற்றி பெறுவதற்கான காரியத்தை தொடங்கும் போது.. இத்தகைய பரிகாரத்தை மேற்கொண்டால், அனைத்து தடைகளையும் கடந்து, தன வரவு கிடைக்கும். மேலும் இவை உங்களுடைய குடும்பத்தையும், குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வ நிலையை மேம்படுத்தும் கொட்டையூர் கோடீஸ்வரர்...

2024-04-15 17:19:54
news-image

அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி தரும் செந்தலை...

2024-04-11 10:43:09
news-image

சிறுநீரக கோளாறுகளை நீக்கி அருள் புரியும்...

2024-04-09 17:37:27
news-image

வாஸ்து தோஷமும், பித்ரு தோஷமும் நீக்கி...

2024-04-08 18:31:07
news-image

பெண்மணிகள் தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்...

2024-04-05 20:56:43
news-image

குழந்தை வரம் அருளும் வழுவூர் வீரட்டானேஸ்வரர்...

2024-04-04 15:21:26
news-image

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் -...

2024-04-04 15:24:18
news-image

புண்ணியத்தை அள்ளித் தரும் ஸ்ரீ வாஞ்சியம்...

2024-04-03 12:56:05
news-image

சித்தர்கள் அருளிய கோமுகி தீர்த்த பரிகாரம்

2024-04-02 14:21:11
news-image

துயர் களையும் தீப பரிகார வழிபாடு

2024-04-01 17:32:20
news-image

முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் தோஷங்களை விலக்கி,...

2024-03-24 21:02:46
news-image

சனி தோஷத்தை நீக்கும் ஆலய பரிகாரம்..!

2024-03-20 09:18:25