மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நம்பிக்கை நட்சத்திர நடிகரான ஷேன் நிகாம், 'மெட்ராஸ்காரன்' என பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
'ரங்கோலி' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'மெட்ராஸ்காரன்'. இப்படத்தில் மலையாள நடிகர் ஷேன் நிகாம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் ஆர் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ஜெகதீஷ் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது என்றும், சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மலையாளத்தில் வெளியான ' இஷ்க்', 'கும்பளாங்கி நைட்ஸ்', 'ஆர் டி எக்ஸ்' ஆகிய படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் ஷேன் நிகாம் தமிழில் அறிமுகமாவதால் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM