இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கம பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான்  இன்று  பிறப்பித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 135 மில்லியன் ரூபாவினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் சஷி வெல்கமவை கடந்த டிசம்பர் மாதம்  20 ஆம் திகதி கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது