கடந்த 2017 பெப்ரவரி 28 ஆம் திகதியன்று, சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற ACCA நிலைபேற்றியல் அறிக்கை விருதுகள் 2016 நிகழ்வில் Diesel and Motor Engineering (DIMO) PLC ஒட்டுமொத்தமாக இரண்டாவது ஸ்தானத்தை தனதாக்கியுள்ளது.

இலங்கையிலுள்ள நிறுவனங்கள் மத்தியில், நிலைபேற்றியல் தொடர்பான அவற்றின் அறிக்கை வெளியீட்டில் தமது செயற்பாடுகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை பொறுப்பேற்பு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை வெளிக்காண்பிக்கும் நிறுவனங்களுக்கு இனங்காணல் அங்கீகாரமாக இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்குப் புறம்பாக, “சில்லறை வர்த்தகம் மற்றும் வாணிபம்” என்ற பிரிவிலும் வெற்றியாளருக்கான விருதை DIMO நிறுவனம் தனதாக்கியுள்ளது.

இவ்வெற்றி தொடர்பில் DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான ரஞ்சித் பண்டிதகே கருத்து வெளியிடுகையில்,

“விருதுகளை இலக்கு வைப்பதற்கு ஒரு போதும் எமது அறிக்கை வெளியீட்டு நடைமுறைகள் முன்னுரிமை அளிப்பதில்லை. இந்த வருடத்திற்கான ஆண்டறிக்கைக்கு இந்த இனங்காணல் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

எமது நிறுவனத்தின் மூலமான தாக்கங்கள்ரூபவ் செயற்பாடுகள் மற்றும் மூலோபாயங்கள் தொடர்பில் சாதக மற்றும் பாதக அம்சங்கள் அனைத்தையும் வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும்ரூபவ் அறிக்கையில் உள்ளடக்க வேண்டும் என்பதில் நாம் கொண்டுள்ள தீவிரமான அர்ப்பணிப்பை இவ்விருது காண்பிக்கின்றது.

நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் மூலோபாயம் தொடர்பான எமது தொலைநோக்கு, தொடர்ந்து எமது செயற்பாடுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், DIMO நிறுவனம் எவ்வாறு தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்பது எமது அறிக்கையில் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் நாம் மேற்கொள்ளும் அனைத்து தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் நாம் தோற்றுவிக்கின்ற அல்லது தீர்ந்துபோகச் செய்கின்ற பெறுமானத்தை மதிப்பீடு செய்தல்ரூபவ் இந்த நடைமுறை தொடர்பில் கண்ணுக்கு புலப்படுகின்ற அல்லது புலப்படாத, நிதியியல்ரீதியான அல்லது ஏனைய பயன்கள் தொடர்பில் மதிப்பீட்டை மேற்கொள்ளும் நடைமுறையை கடந்த காலங்களில் நாங்கள் அறிமுகப்படுத்தி, அதனை சிறப்பாக முன்னெடுத்து வந்துள்ளோம். அதன் முடிவுகள் மகத்தானவைரூபவ்” என்று குறிப்பிட்டார்.

தனது செயற்பாடுகள் அனைத்தையும் பொறுப்புணர்வுடன் முன்னெடுக்க வேண்டும் என்பது ACCA நிறுவனத்தின் கொள்கையாக உள்ளதுடன், இலங்கையில் நிலைபேற்றியல் அறிக்கையை முதன்முதலாக வெளியிட முன்வந்த நிறுவனங்களில் ஒன்றாகவும் அது திகழ்ந்து வருகின்றது. நிலைபேற்றியல் அறிக்கைக்கான தனது முதலாவது ACCA விருதை அது ஒரு தசாப்த காலத்திற்கு முன்னர், 2005 ஆம் ஆண்டிலேயே வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒருங்கிணைந்த அறிக்கையை இலங்கையில் முதன்முதலாக வெளியிட்டு வைத்த நிறுவனமாகவும் அது திகழ்ந்து வருகின்றது. “நீங்கள் காண்பவற்றையே, பெற்றுக்கொள்கின்றீர்கள்” (What you see is what you get) என்ற தொனிப்பொருளில்ரூபவ் 2016 மார்ச் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டுக்கான DIMO வருடாந்த அறிக்கையானது நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆறாவது ஒருங்கிணைந்த அறிக்கையாகும்.

புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஒட்டுமொத்தமாக இரண்டாவது ஸ்தானத்திற்கான வெற்றி விருதை கஹநாத் பண்டிதகே (பிரதம நிறைவேற்று அதிகாரி) பெற்றுக்கொள்கின்றார்.