20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை அணிக்கு பங்களிப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தமையையிட்டு பெருமை யடைவதாக 1996 உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அசங்க குருசிங்க தெரிவித்தார்.
இலங்கைக்கு 1996 உலகக் கிண்ணத்தைப் பெற்றுத்தருவதில் 3ஆம் இலக்க வீரராகக் களமிறங்கி அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியை அதிரவைத்து தனக்கென்ற தனியொரு முத்திரை பதித்த இலங்கை அணியின் முன்னாள் ஆட்டக்காரர் அசங்க குருசிங்க 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்றவுள்ளார்.
இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக அசங்க குருசிங்கவை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது. தனது பதவியினைப் பொறுப்பேற்க நேற்றுகாலை நாடு திரும்பிய அசங்க குருசிங்கஇவிசேட ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டார்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், எனது பாடசாலை நண்பருமான அரவிந்த டி சில்வாவுடன் நான் பாடசாலை கிரிக்கெட்டில் அறிமுகமானேன்.
அதன் பிறகு இளம் வயதில் தேசிய அணியில் இடம்பிடித்தேன்.உண்மையில் 1996 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் அரைச்சதம் குவித்ததுடன் ஆட்டநாயகன் அரவிந்த சில்வாவுடன் மூன்றாவது விக்கெட்டில் இணைந்து துடுப்பெடுத்தாடி இலங்கை அணி சம்பியனாவதற்கு வழிவகுத்திருந்தமை இன்றைக்கும் என்னை பிரமிக்க வைத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால என்னை கடந்த 5 மாதங்களுக்கு முன் அவுஸ்திரேலியாவில் சந்தித்தபோது இப்பதவியை ஏற்குமாறு அழைப்புவிடுத்திருந்தார். எனவே இன்று நான் அவருடைய அழைப்பை ஏற்று மீண்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ளேன்.
குறிப்பாக முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணியை சிறப் பான முறையில் கட்டியெழுப்பி 2019 உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த அணியொன்றை உருவாக்குவதே எனது இலக்காகும் என குருசிங்க தெரிவித்தார்.
இலங்கை அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 சதங்களுடன் 2452 ஓட்டங்களைக் குவித்துள்ள அசங்க, 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி யுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM