வென்னப்புவயில் தேசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி

20 Jan, 2024 | 10:18 AM
image

(நெவில் அன்தனி)

டயலொக் ஆசி ஆட்டா நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள தேசிய வலைபந்தாட்ட சுற்றுப் போட்டி வென்னப்புவை, அல்பட் எவ். பீரிஸ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (20), ஞாயிற்றுக்கிழமை (21) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

இந்த வருட டயலொக் தேசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் யாழ். மாவட்ட வலைபந்தாட்ட சங்கம் மற்றும் மன்னார் மாவட்ட வலைபந்தாட்ட சங்கம் ஆகியவற்றின்   அணிகள் பங்குபற்றவுள்ளன.

யாழ். மாவட்ட அணியில் முன்னாள் தேசிய வீராங்கனை சேதுகாவலர் எழிலேந்தினி, யாழ். மாவட்ட வலைபந்தாட்ட சங்கத் தலைவர் அபிதா உட்பட சிரேஷ்ட வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். இதன் காரணமாக கடந்த காலங்களை விட இந்த வருடம் யாழ். அணி பெரு முன்னேற்றதை வெளிப்படுத்தும் என நம்பப்படுகிறது.

மன்னார் மாவட்ட வலைபந்தாட்ட சங்கம் இரண்டு அணிகளைக் களம் இறக்கவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இவற்றுடன் மொத்தமாக 21 மாவட்ட வலைபந்தாட்ட சங்கங்களைச் சேர்ந்த 33 அணிகள் இம் முறை பங்குபற்றவுள்ளன. பல மாவட்டங்களிலிருந்து தலா 2 அணிகள் போட்டியிடவுள்ளன.

இந்த வருட தேசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் நடப்பு சம்பியன் வர்த்தக வலைபந்தாட்ட சங்கம், கடந்த வருடம் இரண்டாம் இடத்தைப் பெற்ற விமானப்படை வலைபந்தாட்ட சங்கம் ஆகியன உட்பட பலம் வாய்ந்த அணிகள் பங்குபற்றவுள்ளன.

அவற்றில் சமகால மற்றும் முன்னாள் தேசிய வீராங்கனைகள் பலர் இடம்பெறுவதால் இந்த வருட சுற்றுப் போட்டி மிகவும் விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சுற்றுப் போட்டியில் சம்பியனாகும் அணி, இரண்டாம் இடத்தைப் பெறும் அணி ஆகியவற்றுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்படும்.

அத்துடன் அதிசிறந்த மத்திய கள வீராங்கனை, அதிசிறந்த கோல் தடுப்பு வீராங்னை, அதிசிறந்த கோல் போடும் வீராங்கனை, வலைபந்தாட்ட இராணி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு விசேட விருதுகள் வழங்கப்படும்.

இது இவ்வாறிருக்க, இந்த வருடம் சவூதி அரேபியாவில் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியை முன்னிட்டு 18 வீராங்கனைகளைக் கொண்ட குழாம் தேர்வுப் போட்டிகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் விக்டோரியா லக்ஷ்மி தெரிவித்தார்.

தேசிய வலைபந்தாட்டப் போட்டியில் இனங்காணப்படும் உயரமான அதிசிறந்த வீராங்கனைகளும் தேசிய குழாத்திற்குள் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

கனிஷ்ட வலைபந்தாட்டப் போட்டிகள் அடுத்த மாதம் நடத்தப்படும் எனவும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள கனிஷ்ட உலக மற்றும் ஆசிய வலைபந்தாட்டப் போட்டிகளுக்கு வீராங்கனைகளைத் தெரிவு செய்யும் பொருட்டு மாவட்டம் தோறும் தேர்வுகள் இடம்பெறும் எனவும் விக்டோரியா லக்ஷ்மி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37