(நெவில் அன்தனி)
அடிலெய்ட் விளையாட்டரங்கில் துடுப்பாட்ட வீரர்கள் சிரமத்தை எதிர்கொண்டதும் 3 தினங்களுக்குள் நிறைவடைந்ததுமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 10 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.
இந்த வெற்றிக்கான 12 ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளை அவுஸ்திரேலியா பெற்றுக்கொண்டது.
ட்ரவிஸ் ஹெட் குவித்த சதம் (119 ஓட்டங்கள்), ஜொஷ் ஹேஸ்ல்வூடின் 9 விக்கெட் குவியல், பெட் கமின்ஸின் சிறப்பான பந்துவீச்சு என்பன அவுஸ்திரேலியாவுக்கு இலகுவாக வெற்றிபெற உதவின.
அப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 79 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களை வீழ்த்திய ஜொஷ் ஹேஸ்ல்வூட் டேஸ்ட் போட்டி ஒன்றில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் அறிமுக வீரர் ஷமர் ஜோசப் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து பாராட்டைப் பெற்றார்.
ஷமர் ஜோசப் தனது முதல் பந்திலேயே அவுஸ்திரேலியாவின் புதிய ஆரம்ப வீரரும் சிரேஷ்ட வீரருமான ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டைக் கைப்பற்றி வரலாறு படைத்தார்.
துடுப்பாட்டத்திலும் ஷமர் ஜோசப் திறமையை வெளிப்படுத்தினார். கடைசி விக்கெட்டில் கெமர் ரோச்சும் ஷமர் ஜோசப்பும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டி 3ஆம் நாள் காலை முதலாவது ஆட்ட நேர பகுதியில் நிறைவுக்கு வந்தது.
அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 283 ஒட்டங்களே இந்த டெஸ்ட் போட்டியில் பெறப்பட்ட அதிகப்பட்ச இன்னிங்ஸ் எண்ணிக்கையாக இருந்தது.
2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்த வெற்றியுடன் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ள அவுஸ்திரேலியா, சேர் ப்ரான்க் வொரல் கிண்ணத்தையும் தக்க வைத்துக்கொண்டது.
எண்ணிக்கை சுருக்கம்
மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 188 (கேர்க் மெக்கென்ஸி 50, 11ஆம் இலக்க வீரர் ஷமர் ஜோசப் 36, 10ஆம் இலக்க வீரர் கெமர் ரோச் 17 ஆ.இ., பெட் கமன்ஸ் 41 - 4 விக்., ஜொஷ் ஹேஸ்ல்வூட் 44 - 4 விக்.)
அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சலலரும் ஆட்டம் இழந்து 283 (ட்ரவிஸ் ஹெட் 119, உஸ்மான் கவாஜா 49, நேதன் லயன் 24, ஷமர் ஜோசப் 94 - 5 விக்., ஜஸ்டின் க்றீவ்ஸ் 36 - 2 விக்., கெமர் ரோச் 48 - 2 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 120 (கேர்க் மெக்கென்ஸி 26, ஜஸ்டின் க்றீவ்ஸ் 24, யொசுவா டா சில்வா 18, ஜொஷ் ஹேஸ்ல்வூட் 35 - 5 விக்., நேதன் லயன் 4 - 2 விக்., மிச்செல் ஸ்டாக் 46 - 2 விக்.)
அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 26 ஓட்டங்கள்) 2ஆவது இன்: விக்கெட் இழப்பின்றி 26 ஓட்டங்கள் (ஸ்டீவன் ஸ்மித் 11 ஆ.இ., உஸ்மான் கவாஜா 9 - உபாதையால் ஓய்வு)
ஆட்டநாயகன்: ட்ரவிஸ் ஹெட்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM