நாரம்மலயில் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் : உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட இருவர் தற்காலிக பணிநீக்கம்

20 Jan, 2024 | 09:31 AM
image

கைதான உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட இருவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாரம்மலயில் ஒருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கைதான உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாரம்மல, தம்பலஸ்ஸ பகுதியில் 18 ஆம் திகதி  வியாழக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார்.

லொறி ஒன்றை நிறுத்தி பொலிஸார் சோதனையிட்ட போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

வெத்தேவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தார்.

அருகில் இருந்த ஒருவர் குறித்த சம்பவத்தை கைத்தொலைபேசியில் பதிவு செய்திருந்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் தனது சிறிய லொறியில் கட்டுபொத்த பிரதேசத்தில் இருந்து தம்பலஸ்ஸ பகுதி ஊடாக தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். 

பொலிஸாரின் உத்தரவை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது, உப பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி இயங்கி சாரதி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த லொறியின் சாரதி நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்தையடுத்து பிரதேசவாசிகள் நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆத்திரமடைந்த மக்கள், பொலிஸ் நிலையத்தின் முன்னிலையில் வன்முறையில் ஈடுபட்டதுடன் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையிலேயே சம்பவத்துடன் கைதான உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட இருவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலின் வேலைத்திட்டமே சர்வதேச நாணய நிதியத்தின்...

2024-06-13 16:48:39
news-image

பயங்கரவாதிகள் போல் செயற்படுவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க...

2024-06-13 16:54:47
news-image

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்புக்கு...

2024-06-13 20:54:34
news-image

நாளை 2 மணிக்குள் சாதகமான பதிலின்றேல்...

2024-06-13 17:35:08
news-image

நுவரெலியாவில் உடலின் கீழ் பகுதி இல்லாமல்...

2024-06-13 20:19:38
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய...

2024-06-13 19:53:18
news-image

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி...

2024-06-13 19:07:27
news-image

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த...

2024-06-13 17:36:34
news-image

மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்

2024-06-13 17:34:27
news-image

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி...

2024-06-13 17:33:18
news-image

தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு...

2024-06-13 17:27:50
news-image

மற்றுமொரு ரயில் தடம் புரள்வு ;...

2024-06-13 17:13:01