மாதவன் நடிக்கும் 'அதிர்ஷ்டசாலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

19 Jan, 2024 | 04:49 PM
image

நடிகரும் இயக்குநருமான மாதவன் நடிப்பில் தயாராகி வரும் 'அதிர்ஷ்டசாலி' எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் தன்னுடைய பங்களிப்பை மாதவன் நிறைவு செய்திருப்பதாக அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பிரத்யேக காணொளியை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'அதிர்ஷ்டசாலி'. இதில் மாதவன், ஷர்மிளா மந்த்ரே, ராதிகா சரத்குமார், மடோனா செபாஸ்டியன்  சாய் தன்ஷிகா, ஜெகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, அரவிந்த் கமலநாதன் மற்றும் கார்த்திக் முத்துக்குமார் ஆகிய இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.‌

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்துவிட்டதாக அப்படத்தின் கதாநாயகனாக நடித்து வரும் மாதவன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பிரத்யேக காணொளி ஒன்றை பதிவிட்டு தெரிவித்திருக்கிறார். 

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடையும் என்றும், அதை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

இதனிடையே இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளிவந்த 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்', 'மதில்', 'திருச்சிற்றம்பலம்' போன்ற படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றதாலும், நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் கடந்த ஆண்டில் எந்த திரைப்படங்களும் வெளியாகாததாலும், இவர்கள் கூட்டணியில் தயாராகி வரும் 'அதிர்ஷ்டசாலி' எனும் திரைப்படத்துக்கு ரசிகர்களிடையேயும் திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right