வீதியில் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்த இருவரை மடக்கிப் பிடிக்க உதவிய முச்சக்கரவண்டி சாரதி

19 Jan, 2024 | 04:50 PM
image

பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற இருவரை முச்சக்கர வண்டி சாரதியின் உதவியுடன் மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் .

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை  (18) இடம்பெற்றுள்ளது.   

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெண்ணொருவர் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண்ணை வழிமறித்து அவரிடமிருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதன்போது குறித்த வீதியால் மீரிகம நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர், பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றவர்களை தப்பிச் செல்லவிடாது வழிமறித்துள்ளார்.

பின்னர் குறித்த இருவரையும் முச்சக்கர வண்டி சாரதியுடன் பொதுமக்கள் இணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில், பொலிஸார் அவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர் . 

இந்த செயலை பாராட்டும் முகமாக விகாரையொன்றில் இடம்பெற்ற பூஜை நிகழ்வின் போது குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கு பாராட்டி பண பரிசில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிக்கடுவை கடலில் நீராடிய கனேடிய பிரஜை...

2025-01-17 09:30:41
news-image

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து...

2025-01-17 09:32:58
news-image

சிவில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி, தோட்டாக்களுடன்...

2025-01-17 09:09:49
news-image

இன்றைய வானிலை

2025-01-17 06:20:17
news-image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம்...

2025-01-17 05:22:45
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: ...

2025-01-17 05:07:35
news-image

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம்...

2025-01-17 05:01:39
news-image

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் :...

2025-01-17 04:53:30
news-image

சுகாதார சேவைக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்யான...

2025-01-17 04:47:55
news-image

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை...

2025-01-17 04:42:19
news-image

30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம்...

2025-01-17 04:35:37
news-image

பஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில்...

2025-01-17 04:30:34