பொருளாதார மீட்சிக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன - சவால்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன - சர்வதேச நாணயநிதியம்

Published By: Rajeeban

19 Jan, 2024 | 03:58 PM
image

இலங்கை தனக்கு கடன்வழங்கிய உத்தியோகபூர்வ கடன்கொடுப்பனவாளர்களுடன் விரைவில் இறுதி உடன்படிக்கைகளை பூர்த்தி செய்வது அவசியம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட கடன்கொடுப்பனவாளர்களுடன் இலங்கை தீர்மானமொன்றிற்கு வருவதும் அவசியம் எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளின் இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் இந்தகருத்து வெளியாகியுள்ளது.

இலங்கையின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக பொருளாதார மீட்சிக்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்படுகின்றன என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த முன்னேற்றங்கள் இலங்கைமக்களின் வாழ்க்கை தரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்பதால் சவால்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

2023ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு பகுதியில் சாதகமான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி காணப்பட்டுள்ளது பணவீக்கம் குறைவடைந்துள்ளது வருமானங்களை பெற்றுக்கொள்ளுதல் அந்தியசெலவாணிகையிருப்பு அதிகரித்தமை  போன்றவற்றில் முன்னேற்றம்காணப்பட்டுள்ளது எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினை முன்னெடுத்தமை ஒரு மைல்கல் எனவும் சர்வதேச நாணயநிதியம்  பாராட்டியுள்ளது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை...

2025-03-24 12:31:12
news-image

இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி

2025-03-24 12:32:49
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு...

2025-03-24 11:34:10
news-image

பணத் தகராறு ; பெண்ணின் அசிட்...

2025-03-24 11:24:42
news-image

யாழ் - காரைநகர் வீதியில் போட்டிபோட்டு...

2025-03-24 11:18:43
news-image

பதுளை - பண்டாரவளை வீதியில் விபத்து...

2025-03-24 10:40:07
news-image

முச்சக்கரவண்டி - லொறி மோதி விபத்து...

2025-03-24 10:16:56
news-image

வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு!

2025-03-24 10:25:37
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில் காலமானார்!...

2025-03-24 10:05:01
news-image

யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி...

2025-03-24 09:50:15
news-image

தென்னஞ்செய்கையாளர்களுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை...

2025-03-24 09:26:27
news-image

“இன்ஸ்டாகிராம் களியாட்ட நிகழ்வு” : 57...

2025-03-24 09:14:28