இந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்ளூரில் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டமான நேற்று இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிடியெடுப்பொன்றை தவற விட்டதற்காக விராட் கோஹ்லி ஜடேஜாவை நோக்கி கோபமாக பேச, ஜேடேஜா பதிலுக்கு ஏதோ ஒன்றை கூறி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை நடைபெற்றுவருகின்ற இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி 102 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழ்ந்துள்ளது.

ஆஸி அணி முதலாவது இன்னிங்ஸில் 276 ஓட்டங்களை பெற்றதுடன், இந்திய அணி 189 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.