கர்ம வினைகளை அகற்றும் கால பைரவர் வழிபாடு

19 Jan, 2024 | 03:12 PM
image

ஜாதகத்தில் திசா, புத்தி நன்றாக இருந்தும், கோச்சாரத்தில் சுப கிரகங்கள் இணைவு பெற்று பார்வை இருந்தாலும், தொழிலில் அனுபவம் இருந்தாலும், சிறப்பான வேலையாட்கள் இருந்தாலும், நிலையான மற்றும் தற்காலிகமான வாடிக்கையாளர்கள் ஏராளமாக இருந்தாலும்... நாம் செய்துவரும் தொழிலில் லாபம் என்பது குறைவாகவே இருக்கும் அல்லது இந்த தொழிலை செய்து வருவதன் மூலம் எமக்கு கிடைக்கும் மன நிறைவு என்பது மிக மிக குறைவாகத்தான் இருக்கும். சேமிப்பு என்பது இல்லாதிருக்கும். இதற்கு காரணம், கர்ம வினைகள்தான். அதாவது நாம் எம்மையும் அறியாமல் எம்முடன் கொண்டுவரும் கர்மாக்கள் தான்.

இதனை களைவதற்கு ஒவ்வொரு சோதிட நிபுணர்களும் வெவ்வேறு வகையினதான பரிகாரங்களை பரிந்துரைப்பர்.‌ அவர்கள் எடுத்துரைக்கும் பரிகாரங்களை நம்பிக்கையுடன் மேற்கொண்டவர்களுக்கு குறிப்பிட்ட கால எல்லை வரை அந்த பரிகாரங்கள் பலனளிக்கக்கூடும். ஆனால் ஆயுள் முழுவதும் கர்ம வினைகளால் பாதிப்பு என்பது இருந்து கொண்டேதான் இருக்கும்.‌ இதனை களைவதற்கு எம்முடைய ஜோதிட நிபுணர்கள் கால பைரவ வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கால பைரவர் என்பது காலத்தை நிர்ணயம் செய்பவர் என்பதால் இவரை எப்போது வேண்டுமானாலும் வணங்கலாம். வழிபடலாம். அதிலும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இவருக்கு கருநொச்சி மாலையை அணிவித்து வழிபட்டால், உங்களுடைய கர்ம வினைகள் முழுவதுமாக அகலும். இந்த கருநொச்சி மாலையை நாட்டு மருந்து கடைகளிலோ அல்லது ஆன்மீக பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களிலோ சொல்லி வைத்தால் அவர்கள் அதனை சேகரித்து தருவார்கள். 

இந்த கருநொச்சி மாலையை தேய்பிறை அஷ்டமி தினத்தன்று கால பைரவருக்கு அணிவித்து வழிபட்டால், கர்ம வினைகள் முழுவதும் அகன்று சுப பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்.

இதனிடையே நீங்கள் செய்துவரும் தொழிலில் யாரேனும் தடையை ஏற்படுத்தினால் அல்லது மறைமுகமாக தடையை ஏற்படுத்தினால், நீங்கள் அருகில் உள்ள கால பைரவர் ஆலயத்துக்கோ அல்லது சன்னதிக்கோ சென்று, தேய்பிறை அஷ்டமி தினத்தன்று முழு பூசணிக்காயை இரண்டாக வெட்டி, நடுப்பகுதியை முழுவதுமாக தோண்டி எடுத்து, அந்தப் பகுதியில் நல்லெண்ணெய் அல்லது நெய்யை விட்டு காலபைரவர் வீற்றிருக்கும் திசை நோக்கி விளக்கேற்றினால், தொழிலில் இருந்த தடைகள் அகன்று, இலாபம் அதிகரிப்பதை கண்கூடாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வ நிலையை மேம்படுத்தும் கொட்டையூர் கோடீஸ்வரர்...

2024-04-15 17:19:54
news-image

அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி தரும் செந்தலை...

2024-04-11 10:43:09
news-image

சிறுநீரக கோளாறுகளை நீக்கி அருள் புரியும்...

2024-04-09 17:37:27
news-image

வாஸ்து தோஷமும், பித்ரு தோஷமும் நீக்கி...

2024-04-08 18:31:07
news-image

பெண்மணிகள் தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்...

2024-04-05 20:56:43
news-image

குழந்தை வரம் அருளும் வழுவூர் வீரட்டானேஸ்வரர்...

2024-04-04 15:21:26
news-image

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் -...

2024-04-04 15:24:18
news-image

புண்ணியத்தை அள்ளித் தரும் ஸ்ரீ வாஞ்சியம்...

2024-04-03 12:56:05
news-image

சித்தர்கள் அருளிய கோமுகி தீர்த்த பரிகாரம்

2024-04-02 14:21:11
news-image

துயர் களையும் தீப பரிகார வழிபாடு

2024-04-01 17:32:20
news-image

முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் தோஷங்களை விலக்கி,...

2024-03-24 21:02:46
news-image

சனி தோஷத்தை நீக்கும் ஆலய பரிகாரம்..!

2024-03-20 09:18:25