(எம்.வை.எம்.சியாம்)
இந்த நாட்டில் மக்கள் சார்பாக இருக்காத அனைவரும் திருடர்கள்.அதன் காரணமாகவே பாராளுமன்றத்தில் இருக்கும் 225 பேரும் திருடர்கள் என முத்திரை குத்தப்பட்டது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிப்போம் நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் ஐக்கிய இலங்கை எனும் புதிய கூட்டணி ஒன்று முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் பொலன்னறுவையில் நேற்றுமுன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இந்த நாட்டில் மக்கள் சார்பாக இருக்காத அனைவரும் திருடர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாராளுமன்றத்தில் இருக்கும் 225 பேரும் திருடர்கள் என முத்திரை குத்தப்பட்டது எவ்வாறு? திருட்டை கொண்டே சிலர் அதிகாரத்துக்கு வந்தனர். பின்னரும் அவர்கள் அதனையே செய்தனர். இந்த வருடம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
ராஜபக்ஷ அரசாங்கத்துக்குள் ஊழல் மோசடி இடம்பெறுமாயின் அதற்கு நாம் அனுமதி வழங்க மாட்டோம். கிரிக்கெட்டில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் நாம் வெளிக்கொணர்ந்தோம். இறுதியில் என்ன நடந்தது? ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக எத்தனை பேர் பாராளுமன்றில் பேசினார்கள்.
ரொஷான் ரணசிங்கவையும் வெளியேற்றி விட்டு மக்கள் நிராகரித்த ஒருவரை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தனர். அவரை வைத்து திருடர்களுக்கும் உதவி செய்தனர்.நாட்டில் முதலில் ஊழலை நிறுத்த வேண்டும் என்றால் கணக்காய்வாளர் நாயகத்துக்கு நீதிமன்ற அதிகாரத்தை வழங்க வேண்டாம்.சிங்கபூரின் சட்டங்களை கொண்டு வரவேண்டும் என்றார்.
இதேவேளை இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உரையாற்றுகையில்,
பக்கச்சார்பற்ற போரட்டத்துக்கு புதிய தோற்றத்தை வழங்கும் நோக்கில் புதிய நிகழ்ச்சி நிரலுடன் முன்னோக்கி செல்வோம். அதற்கான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் உங்களுடைய தலைமைத்துவம் அவசியமானது. உணவுக்காகவும் மதுபானத்திற்காகவும் வாக்களித்து விட்டு எதிர்வரும் 5 வருடங்களுக்கு துன்பப்பட வேண்டாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM