சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் இன்று வெளியாகிறது

Published By: Nanthini

19 Jan, 2024 | 01:16 PM
image

நகைச்சுவை நடிகர் சூரி துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ இன்று (19) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, சூரி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது. 

இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, அவர்களுக்கு ஜோடியாக ரேவதி சர்மா, ஷிவதா நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். 

இவர்களுடன் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி என பலர் நடித்துள்ளனர்.

ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் கே.குமார் தயாரித்துள்ளார். 

இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

2025-03-18 21:38:39
news-image

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு...

2025-03-18 17:01:25
news-image

மீண்டும் திரையில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ்

2025-03-18 16:15:33
news-image

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படத்தின் 'உருகுது...

2025-03-18 16:00:12
news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23
news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40