புத்தளத்தில் இனந்தெரியாத விசமிகளால் படகு மற்றும் வலைகளுக்கு தீ வைப்பு : பல கோடி ரூபா நட்டம்

Published By: Vishnu

19 Jan, 2024 | 05:01 PM
image

புத்தளம் தமிழர் பகுதியில் இனந்தெரியாத விசமிகளினால் படகு மற்றும் வலைகளுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் இரண்டு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் உடப்பு பொலிஸ் பிரிவிற்குபட்ட ஆண்டிமுனைப் பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத விசமிகளினால் செல்வநாதன் சொக்கலிங்கம் என்பவருக்குச் சொந்தமான படகு, இயந்திரம், 3 வள்ளங்கள் மற்றும் 4 வலைகளுக்குத் தீ வைத்துள்ளனர்.

இதனால் படகு, இயந்திரம், வள்ளம் முற்றாக தீக்கிரையுள்ளதாகவும் 3 வள்ளங்கள் பகுதியில் சேதமாகியுள்ளதாகவும்  4 வலைகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தீயிட்டு கொளுத்தப்பட்ட படகு, இயந்திரம், வள்ளங்கள் மற்றும் வலைகள் சுமார் 2 கோடி 15 இலட்சம் ரூபா பெறுமதியென மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சம்பவம் உடப்பு ஆண்டிமுனைப் பகுதியில் இடம்பெற்றதில்லையெனவும் இதுவே முதல் தடவையெனவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஒருமாத காலமாக தமிழருக்கும் சிங்களவர்களுக்கும் தொழில் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் இதனால் குறித்த நாசகார வேலையை பெரும்பான்மையினர் செய்திருக்கலாமெனவும் சந்தேகிப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் விசாராணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27
news-image

இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பில் டில்லியின்...

2026-04-20 05:24:55
news-image

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை சாத்தியமாக்க...

2026-04-20 04:42:11
news-image

திருகோணமலை ஹோட்டல் தீ விபத்து: கட்டிடம்...

2026-04-20 04:23:22