ஒருபுறம் கலைநிகழ்ச்சிகளை காண்பித்தவாறு மறுபுறம் திருகோணமலையின் சொத்துக்களை விற்கிறார்கள் - அருண் ஹேமச்சந்திரா

Published By: Vishnu

19 Jan, 2024 | 11:10 AM
image

ஒருபுறம் கலைநிகழ்ச்சிகளை காண்பித்தவாறு மறுபுறம் திருகோணமலையின் சொத்துக்களை விற்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மற்றும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

18 சதவீத வற் வரிக்கு எதிராக மூதூரில் வியாழக்கிழமை (18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது கருத்து வெளியிடுகையிலேயே அருண் ஹேமச்சந்திரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஒருபுறம் பொங்கல் பண்டிகை, கலை நிகழ்ச்சிகள் என்று வெளி உலகுக்கு காண்பித்துக் கொண்டு மறுபுறத்தில் திருகோணமலையின் வளங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தில் இறங்கியிருக்கிறது.

இலங்கையில் பெறுமதிமிக்க வளங்களை கொண்ட மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் இருக்கிறது. 

ஆனால், இங்குள்ள சொத்துக்கள் குறைந்த விலைக்கு அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதை திசைதிருப்பும் முகமாக பல்வேறு கொண்டாட்ட வைபவங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. ஆக, இவ்வாறு எமது வளங்களை அந்நியருக்கு தாரைவார்ப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டியில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-03-26 10:54:53
news-image

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து...

2025-03-26 10:55:06
news-image

களனி பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி...

2025-03-26 10:38:06
news-image

கொழும்பில் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு...

2025-03-26 10:43:58
news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54