மன்னார் தாழ்வுப்பாட்டிலுள்ள காணி ஒன்றிலிருந்து 24 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

19 Jan, 2024 | 10:56 AM
image

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள  காணி ஒன்றில் இருந்து வியாழக்கிழமை (18) ஒரு தொகுதி போதை மாத்திரைகள்  மீட்கப்பட்டதோடு ,சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தாழ்வுபாடு கடற்படைக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் கடற்படையினருடன், தலை மன்னார் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து குறித்த பகுதியில் உள்ள காணியை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த காணியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 மில்லி கிராம் எடை கொண்ட 24 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், மீட்கப்பட்ட போதை மாத்திரைகளும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . 

அண்மைய நாட்களாக சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படும் போதை மாத்திரைகள் விற்பனைக்காக   மன்னாரில் உள்ள சில கிராமங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு துறையினரால் குறித்த போதை மாத்திரைகள்  மீட்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28
news-image

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும்...

2025-02-13 21:29:02
news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15