யேமனிய துறைமுன நகரான ஏடனின் ஆளுநர் படுகொலைத் தாக்குதலொன்றில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநரான எயிடாரெஸ் அல் சுபெய்டி பயணம் செய்த வாகனத் தொடரணியை இலக்கு வைத்து கார் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஆளுநரின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தத் தாக்குதலை தாமே நடத்தியுள்ளதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இதையொத்த தாக்குதலில் அந்நகரின் ஆளுநர் ஜாபர் மொஹமட் சாத் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யேமனில் கடந்த வருடம் மார்ச் மாதம் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது முதற் கொண்ட ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.