(இராஜதுரை ஹஷான்)
அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பான முறைப்பாடு மற்றும் மேன்முறையீடுகளை பரிசீலனை செய்யப்பட்டதை தொடர்ந்து 3 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான ஆறு மாதகால இடைக்கால கொடுப்பனவு வெகுவிரைவில் வழங்கப்படும் என பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நலன்புரி சேவைகள் சபையின் அதிகாரிகளுடன் நிதி அமைச்சில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அஸ்வெசும நலன்புரி செயற்திட்டம் தொடர்பில் முன்னைக்கப்பட்டிருந்த 64,0000 முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகள் ஆகியவற்றை மீள் பரிசீலனை செய்ததை தொடர்ந்து 3 இலட்சம் குடும்பங்களை நலன்புரி பயனாளர் பட்டியலில் மேலதிகமாக இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நலன்புரி கொடுப்பனவுகள் பெறும் பயனாளர்களின் எண்ணிக்கை 17 இலட்சமாக உயர்வடையும். பயனாளர்களுக்கான அடுத்த தவணை கொடுப்பனவை வழங்குவதற்கு முன்னர் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பர், ஒக்டோபர்,நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களுக்கான இடைக்கால கொடுப்பனவு வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும்.
மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகளினால் இதுவரை அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொண்ட5,209 குடும்பங்கள் நலன்புரி கொடுப்பனவை தொடர்ந்து பெறுவதற்கு தகுதியற்றவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன்,2567 குடும்பங்கள் நலன்புரி கொடுப்பனவு பயனாளர் பட்டியலில் இருந்து தரமிறக்கப்பட்டுள்ளனர்.
11 இலட்ச முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகள் வெகுவிரைவில் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளன.50,882 பயனாளர்கள் தமது நிவாரண கொடுப்பனவில் பயனடைந்துள்ளமை வரவேற்கத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM