தமிழரசுக்கட்சியின் தலைவராக சுமந்திரன் வந்தால் தமிழ்த்தேசியத்திற்கு பாதிப்பு ஏற்படும் - எம்.பி.யோகேஸ்வரன்

Published By: Vishnu

19 Jan, 2024 | 09:50 AM
image

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக வந்தால் தமிழ்தேசியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்திவிடும் என முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான வேட்பாளர்கள் குறித்து நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு வியாழக்கிழமை (18) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான வேட்பாளர் தொடர்பில், கிழக்கு மாகாண மக்கள் எவ்வாறு தேசியத்தினை நேசித்து இருக்கின்றனர் என்ற விடயம் தெளிவாக வெளிப்படும். ஏன் ஏன்றால் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.

தமிழ் தேசியத்தினை பாதுகாக்க வேண்டும். கடந்த காலத்தில் தமிழ் மக்களின் முக்கிய பேச்சாளராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் தமிழ் மக்கள் மீது வெளியீட்ட கருத்துக்கள் தேசியத்திற்கு ஏதிராக அமைந்து. இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்சி.சிறிதரன் அவர்களை ஆதரிப்பதாக தெளிவாக தெரியப்படுத்தியுள்ளனர்.

நான் வேட்பாளராக இருந்தாலும் எனது வாக்கினையும் அளிப்பேன். தமிழ் தேசியம் பாதுகாக்கும் வரை இறுதி வரை இருப்பேன். வடமாகாண மக்களும் அதனை உணர்ந்து தமிழ் தேசியத்தினை வெற்றி பெறச்செய்யவேண்டும். தமிழ் தேசியத்தினை பாதுகாக்காக பொருத்தமான தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவஞானம் அவர்களே ஆகும்.

எல்லோருக்கும் தெரியும் சர்வதேச ரீதியாக புலம்பெயர்ந்த நாட்டுக்கு  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.சுமந்திரன் அவர்கள் செல்லும் போது அவருக்கு புலம் பெயர்ந்தவர்களிடமிருந்து ஏதிராக கோசங்கள் எழுப்பபட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஆ.சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் புதியதலைவராக வந்தால் அது தமிழ்தேசியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்திவிடும்.

பொதுச்சபை உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களை ஆதரிக்கும் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும் வேறு விதமாக தேர்தல் நடக்குமா என்பது ஏதிர்வரும் 21.01.2024 அன்று தெரியவரும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19
news-image

ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி -...

2025-02-16 20:52:46
news-image

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம்...

2025-02-16 16:20:02
news-image

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற...

2025-02-16 21:42:35
news-image

முல்லைத்தீவிற்கு வருகை தந்த பிரதமர்; ஏமாற்றமடைந்த...

2025-02-16 21:44:11
news-image

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும்...

2025-02-16 21:30:13
news-image

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு

2025-02-16 21:17:06
news-image

யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி...

2025-02-16 19:59:52
news-image

பொதுச்செயலராக சுமந்திரன் நியனம்: இலங்கைத் தமிழரசுக்...

2025-02-16 21:27:42